வேலைவாய்ப்பு தொடர்பில் கூகுளில் தேடுவோருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
47Shares

முன்னணி இணைய தேடுபொறியான கூகுளில் மக்களுக்கு தேவையான பல்வேறு தரவுகள் காண்பிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் வேலைவாய்ப்பு தொடர்பிலும் பயனர்கள் தேடிப்பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

எனினும் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருப்பதில்லை.

எனவே இப் பிரச்சினைக்கு தீர்வாக தேடும்போது கிடைக்கும் பெறுபேறுகளில் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பானவற்றினை காண்பிக்க கூகுள் முடிவு செய்துள்ளது.

அத்துடன் பயனர்களின் இருப்படங்களுக்கு ஏற்றவாறும் வேலைவாய்ப்பு தொடர்பான பெறுபேறுகளை கூகுள் காண்பிக்கவுள்ளது.

இவ் வசதியானது முதன் முதலாக ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகம் செய்யப்படுகின்றது.

அதன் பின்னர் ஏனைய நாடுகளிலும் இவ் வசதி விஸ்தரிக்கப்படவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்