கூகுளின் பல்வேறு இணைய சேவைகளில் ஒன்றாக கிளவுட் சேமிப்பகமான கூகுள் ட்ரைவ் வசதி காணப்படுகின்றது.
இங்கு சேமிக்கப்பட்டுள்ள Office கோப்புக்களை எடிட் செய்ய முடிவதுடன், நண்பர்களுடன் அல்லது வேண்டியவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
இவற்றுள் எடிட் செய்வதற்கு இதுவரை காலமும் அவசியம் கூகுள் ட்ரைவினுள் செல்ல வேண்டியிருந்தது.
எனினும் இவ் வசதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது ஜிமெயில் இருந்தவாறே கூகுள் ட்ரைவினுள் உள்ள Office கோப்புக்களை எடிட் செய்ய முடியும்.
இதன் மூலம் நேரம் மீதப்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு Slideds, Docs மற்றும் Sheets ஆகிய அனைத்தையும் எடிட் செய்யக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.