இணைய தேடல் ஜாம்பவான் ஆன கூகுளில் புதிய வசதி ஒன்றினை உள்ளடக்குவது தொடர்பான பரீட்சார்த்த முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கணவே பல மொபைல் அப்பிளிக்கேஷன்களில் டார் மோட் எனும் வசதி தரப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் அல்லது சூழலில் ஒளி குறைந்த நேரங்களில் கண்களிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மொபைல் சாதனங்களை பயன்படுத்துவதற்கு இவ் வசதி பெரிதும் உதவியாக இருக்கின்றது.
இவ்வாறு மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ள இவ் வசதியானது முதன் முறையாக டெக்ஸ் டாப்பில் கொண்டுவரப்படவுள்ளது.
அதாவது டெக்ஸ் டாப் கணினிகளில் பயன்படுத்தப்படும் கூகுள் தேடலிலேயே இந்த டாக் மோட் வசதி தரப்படவுள்ளது.
இதன்போது பின்னணியானது கறுப்பு நிறத்திலும், எழுத்துக்கள் வெள்ளை நிறத்திலும் காண்பிக்கப்படவுள்ளதுடன், இணைப்புகள் நீல நிறத்திலும் காண்பிக்கப்படவுள்ளன.