அமேஷனின் அலக்ஸ்சா சாதனத்தில் அட்டகாசமான வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
17Shares

இணைய இணைப்பு உள்ள நிலையில் பயனர்களுக்கு மிகவும் உதவக்கூடிய வகையில் அலக்ஸ்சா சாதனத்தினை அமேஷன் நிறுவனம் வடிவமைத்துள்ளமை தெரிந்ததே.

குரல் வழி கட்டளைகளின் மூலம் பல வினாக்களுக்கு விடை தெரிந்துகொள்ள முடிவதுடன், வீட்டின் பல கட்டுப்பாடுகளையும் இச் சாதனத்தின் உதவியுடன் மேற்கொள்ள முடியும்.

இப்படியிருக்கையில் தற்போது Live Translation எனும் புதிய வசதி இச் சாதனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதாவது உடனுக்கு உடன் மொழிமாற்றம் செய்யக்கூடிய வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு மொழியில் வழங்கப்படும் கட்களைகளையும் அதற்கான பதில்களையும் பயனர்கள் விரும்பும் மற்றொரு மொழியிலும் ஒரே நேரத்தில் தரக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் குறித்த சாதனத்தில் காணப்படும் பேச்சாற்றல் (Speech) வசதியின் மூலம் மொழிமாற்றம் செய்யப்பட்ட தகவல்களை ஒலி வடிவில் தரக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்