2D புகைப்படங்களை 3D ஆக மாற்ற வேண்டுமா? இதோ கூகுள் தரும் வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
102Shares

கூகுள் நிறுவனம் வழங்கும் பல்வேறு சேவைகளில் கூகுள் போட்டோஸ் சேவையும் ஒன்றாகும்.

புகைப்படங்களை தரவேற்றம் செய்து மெருகூட்ட முடிவதுடன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தவர்களுடன் பகிர்ந்து மகிழும் வசதியையும் தருகின்றது.

இப்படியிருக்கையில் இரு பரிமாணப் புகைப்படங்களை முப்பரிமாணப் படங்களாக மாற்றக்கூடிய புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வதற்கு கூகுள் முயற்சி செய்து வருகின்றது.

அத்துடன் Cinematic முறையிலான அனிமேஷனும் உள்ளடக்கப்படவுள்ளது.

இதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதற்கு கூகுள் தீர்மானித்துள்ளது.

இவ் வசதியானது அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் தரப்படவுள்ளது.

அடுத்த மாதம் முதல் இவ் வசதியினை பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

Settings -> Memories -> Advanced -> toggle on/off Cinematic photos எனும் படிமுறை மூலம் குறித்த வசதியினை செயற்படுத்த முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்