தற்போது அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்லைன் வீடியோ சேவையாக யூடியூப் காணப்படுகின்றது.
இச் சேவையில் அவ்வப்போது புதிய வசதிகள் மற்றும் ஏற்கணவே தரப்பட்டுள்ள வசதிகளில் மாற்றம் என அடுத்தடுத்து தப்பட்டுவருகின்றது.
இந்த வரிசையில் தற்போது மற்றுமொரு மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது Autoplay பொத்தானை வீடியோவின் உள்ளே தருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி டெக்ஸ்டாப் கணினிகளில் யூடியூப் வீடியோக்களை பார்வையிடுபவர்களுக்காக இந்த மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.
இவ் வசதியின் ஊடாக வீடியோ ஒன்று தானியங்கி முறையில் இயங்க வேண்டுமா அல்லது பயனர் பொத்தானை அழுத்திய பின்னர் இயங்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க முடியும்.
இதேவேளை இவ் வசதியானது குரோம் உலாவியின் Incognito மோட்டில் காட்சியளிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.