ஆப்பிள் நிறுவனத்தின் கிளவுட் சேவையானது iCloud என அழைக்கப்படுகின்றது.
இச் சேவையில் உள்நுழைதல் மற்றும் ஆக்டிவேட் செய்தல் என்பவற்றில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று இத் தடங்கல் ஏற்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் 36 மணி நேரங்களின் பின்னர் தற்போது மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ள நிலையில் வழமைக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தினை ஒட்டி கொள்வனவு செய்யப்பட்ட புதிய ஆப்பிள் சாதனங்களிலேயே இப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலாவது முறையீடானது டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம் முறையீடு மேற்கொள்ளப்பட்ட நேரத்திலிருந்து 36 மணி நேரத்தின் பின்னர் மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளது.