பேஸ்புக் கணக்கினை திருட புதிய நுட்பத்தினை அறிமுகம் செய்த ஹேக்கர்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
54Shares

பேஸ்புக் மெசஞ்சரின் ஊடாக பேஸ்புக் கணக்கு மற்றும் தனிநபர் விபரங்களை திருடுவதற்காக ஹேக்கர்கள் புதிய வழிமுறை ஒன்றினை பின்பற்றுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மெசஞ்சரிற்கு வீடியோ இணைப்பு ஒன்றினை ஹேக்கர்கள் அனுப்பி வருகின்றனர்.

அத்துடன் "Is it you in the Video?" எனும் செய்தியையும் அனுப்புகின்றனர்.

அதாவது இந்த வீடியோவில் இருப்பது நீங்களா? என்ற செய்தியை அனுப்புகின்றனர்.

இதன்போது பதட்டப்பட்டு அவ் வீடியோவினை பயனர்கள் திறக்கும்போது பேஸ்புக் கணக்கினுள் லொக்கின் செய்யுமாறு கேட்கும்.

இதன்போது பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் என்பவற்றினை ஹேக்கர்கள் பெற்றுவிடுவார்கள்.

தொடர்ந்து பயனர்களின் தனிநபர் விபரங்களையும் அவர்கள் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி பெற்றுவிடுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்