கடந்த 2020 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் உலகெங்கிலும் இருந்து அதிகளவானவர்கள் மொபைல் அப்பிளிக்கேஷன்களை கொள்வனவு செய்துள்ளனர்.
இதற்கு முந்திய வருடங்களை விடவும் 2020 ஆம் ஆண்டு மிகவும் அதிகம் என SensorTower நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 407.6 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அப்பிளிக்கேஷன்கள் இக் கிறிஸ்துமஸ் தினத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர் மற்றும் கூகுளின் பிளே ஸ்டோர் என்பனவற்றிலிருந்து இத் தொகைக்கு அப்பிளிக்கேஷன்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த வருடம் நொவெம்பர் மாதம் வரை மொபைல் அப்பிளிக்கேஷன்களுக்காக ஒட்டுமொத்த பயனர்களும் செலவிட்ட தொகையானது 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.