இணையப் பாவனை அறிமுகமாக கால கட்டத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட இணைய உலாவியாக மைக்ரோசொப்ட் எக்ஸ்புளோரர் காணப்படுகின்றது.
எனினும் பின்னர் பல உலாவிகள் அறிமுகம் செய்யப்பட்டதனால் பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தது.
குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் குரோம் உலாவியானது ஏனைய அனைத்து உலாவிகளையும் பாவனையில் பின்னுக்கு தள்ளியது.
வேகம் மற்றும் புதிய வசதிகள் உள்ளடங்கலாக அறிமுகமானமையே இதற்கு காரணமாகும்.
இன்றுவரையிலும் முன்னணி உலாவியாக திகழந்து வருகின்றது.
எனினும் அதிகளவான மெமரி தேவைப்படுவதனால் பயனர்கள் இதனை பயன்படுத்துவதற்கு சற்று தயங்குகின்றனர்.
இப்படியான நிலையில் இதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய சில உலாவிகளை பார்க்கலாம்.
Brave, Safari, Vivaldi, Microsoft Edge மற்றும் Mozilla Firefox ஆகிய உலாவிகளை பயன்படுத்த முடியும்.