ஆப்பிள் நிறுவனமானது கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
எனினும் பின்னர் கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் 2024 ஆண்டில் தானியங்கி கார்கள் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவித்தலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தது.
இதனல் டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான எலன் மொஸ்க் தனது நிறுவனத்தினை விற்பனை செய்வதற்கு ஆப்பிள் நிறுவனத்தினை நாடினார்.
ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் கூக் அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது Hyundai நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது.
தனது நீண்ட கால தானியங்கி தொழில்நுட்பத்துடன் கூடிய கார் கனவிற்கு உயிரூட்டுவதற்கே இப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.