இணைய உலகின் ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் உலக மக்களின் தேவைகளை கருத்திற்கொண்டு தனது சேவைகளை வழங்கி வருகின்றது.
இதன் காரணமாகவே இன்றளவும் அந்நிறுவனத்தினை பின்னுக்கு தள்ள எந்த நிறுவனத்தினாலும் முடியவில்லை.
இப்படியிருக்கையில் இந்திய மக்களின் பொழுதுபோக்குகளில் ஒன்றான கிரிக்கெட் போட்டியினை கௌரவித்து மேலும் மக்களின் மனதில் நெருங்கிய இடம் பிடித்துள்ளது கூகுள்.
அதாவது அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரினை இந்திய அணி வென்றிருந்தது.
இந்த வரலாற்று வெற்றியை உலகெங்கிலும் பரந்து வாழும் இந்திய மக்கள் உட்பட இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கொண்டாடினர்.
அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் தனது இணையப் பக்கத்தில் வாணவேடிக்கைகள் போன்ற அனிமேஷன்களை தோற்றுவித்துள்ளது.
India National Cricket Team என்ற சொற்தொடரைக் கொண்டு கூகுள் தேடல் செய்யும்போது இந்த வாணவேடிக்கை அனிமேஷன் காண்பிக்கப்பட்டுள்ளது.