ஜீரோவான மநகூட்டணி... ஹீரோவான மக்கள் தேமுதிக கூட்டணி: ஸ்டாலின் பேச்சு

Report Print Deepthi Deepthi in அரசியல்
ஜீரோவான மநகூட்டணி... ஹீரோவான மக்கள் தேமுதிக கூட்டணி: ஸ்டாலின் பேச்சு
241Shares

கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவிலிருந்து பிரிந்துவந்து உதயமான மக்கள் தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

மேலும், தேமுதிகவை உடைக்க மக்கள் தேமுதிக முயல்வதாக குற்றம்சாட்டி வந்த நிலையில், தேமுதிக நிர்வாகியை வி.சி.சந்திரகுமார் ஆசை வார்த்தைகளை கூறி இழுக்கும் ஓடியோ ஒன்றை தேமுதிக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் தேமுதிக திமுகவில் ஐக்கியமானது.

நிகழ்ச்சியில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று செயல்பட்டவர்கள் பற்றி பேசி தாம் தரம்தாழ்ந்துபோக விரும்பவில்லை ,

திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்கள், மக்கள் தேமுதிகவினர் தேர்தலில் தோற்றாலும் கொள்கையில் ஜெயித்துவிட்டனர்.

அதிமுகவின் 'பி' அணியாக செயல்பட்ட மக்கள் நலக்கூட்டணி ஜீரோவாகிவிட்ட நிலையில், திமுகவில் இணைந்தததன் மூலம் மக்கள் தேமுதிக ஹீரோவாகிவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments