"என்னை கைது செய்யட்டும்": தொல்.திருமாவளவன்

Report Print Deepthi Deepthi in அரசியல்
484Shares
484Shares
ibctamil.com

சுவாதி கொலை வழக்கு குறித்து "சட்டத்திற்கு விரோதமாகவோ, சமூகத்திற்கு விரோதமாகவோ நான் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட சமூகத்தைக் காயப்படுத்தும் விதமாகவும் சொல்லவில்லை. ஹெச்.ராஜா போன்றவர்கள் எழுப்பிய கேள்விகளையே நானும் முன்வைக்கிறேன். ' ராம்குமார் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை' என்று ஹெச்.ராஜாவே ஒரு இடத்தில் சொல்கிறார்.

தொடக்கத்தில் ராம்குமாருக்கு ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, 'கைது செய்தபோது கழுத்தை ராம்குமார் அறுத்துக் கொல்லவில்லை. பொலிஸ்காரர்தான் கழுத்தை அறுத்தனர். கொலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை' என தமிழகக் காவல்துறை மீது சந்தேகம் எழுப்பினார்.

பட்டப்பகலில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதைக் கண்டித்து முதன்முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். வேறு யாரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை.

இந்த வழக்கில் முதலில் கேள்வி எழுப்பியது ஒய்.ஜி.மகேந்திரன். அதன்பிறகு ஹெச்.ராஜா, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்தான் பேசி வந்தனர். ' என்னைக் கைது செய்ய வேண்டும்' என அவர்கள் சொல்வதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

என்னைப் பொறுத்தவரையில், எந்தச் சமூகத்தையும் பழி சொல்லவில்லை. சுவாதி குடும்பத்தைக் காயப்படுத்தும்விதமாகவும் எதையும் சொல்லவில்லை. நான் சொல்வது சட்டத்திற்கு விரோதமாக இருந்தால், கைது நடவடிக்கை எடுக்கட்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments