வெளியானது! ஜெயலலிதாவிற்கு எதிரான சசிகலா புஷ்பாவின் புதிய திட்டம்

Report Print Basu in அரசியல்

தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து வெளிவர சசிகலா புஷ்பா, அதிமுக கட்சிக்கு எதிராக புதிய திட்டம் ஒன்றை தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்டு 22ம் திகதி சசிகலா புஷ்பா மீதுள்ள வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதிமுக கட்சிக்கு எதிராக மற்ற கட்சிகளை அணிதிரட்டும் பணியில் சசிகலா புஷ்பா ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக கட்சியில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் மீதும், அவரின் குடும்பத்தினர் மீதும் தொடர்ந்து பல புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலா புஷ்பா தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்டு 22ம் திகதி விசாரணைக்கு வர உள்ளதால், அதில் இருந்து வெளிவர சசிகலா மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து கட்சி தலைமையிடமும், என் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் போலியானவை என்று உங்களுக்கு நன்றாக தெரியும். என் மீது போடப்பட்ட வழக்குகள் உண்மையா என்று ஆராயும்படி, அறிக்கை வெளியிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments