ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? ஸ்டாலின் பேச்சு

Report Print Gokulan Gokulan in அரசியல்

காவிரி தமிழகத்தில் பாய வேண்டும் என்று உலகத் தமிழர்கள் அனைவரும் போராடி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று எதிர்கட்சி செயல் தலைவரான ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இதில் ஒரு பகுதியாக திருச்சி முக்கொம்புவிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை வரை ஏழு நாள் நடைபயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், அதன் இரண்டாவது நாளான இன்று தஞ்சாவூர் மன்னார்குடி வாண்டையார் வரை செல்கிறார்.

இந்நிலையில் மக்களிடம் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதாவைக் கண்டு மத்திய அரசு நடுங்கியது என்னதான் அவர் சர்வாதிகாரியாக இருந்தாலும் காவிரி விஷயத்தில் மத்திய அரசு இப்படி நடந்து கொள்ள அனுமதித்திருக்க மாட்டார் என்று கூறி இருப்பது பரபரப்பாகியுள்ளது.

மேலும் இப்போதுள்ள அதிமுக ஆட்சி காவிரி விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் அவர்களுக்கு பணிந்து போய்க் கொண்டிருக்கிறது என்றும் இவர் கூறியிருந்தார்.

காவிரி விஷயத்தில் சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து விவசாயிகளுக்கான துரோகத்தை ஆரம்பித்து வைத்தது திமுக அரசுதான் என்றொரு பேச்சு நிலவி வரும் நிலையில் காவிரிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் தான் சிறை செல்லத் தயாராக இருப்பதாகவும், என்ன தண்டனை குடுத்தாலும் ஏற்றுக் கொள்வதாகவும் பேசியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்