பெற்றோரின் இரத்த வகையால் குழந்தை பிறப்பில் பாதிப்பு ஏற்படுமா?

Report Print Fathima Fathima in கர்ப்பம்
பெற்றோரின் இரத்த வகையால் குழந்தை பிறப்பில் பாதிப்பு ஏற்படுமா?

இரத்தில் பல வகை உண்டு. அதில் Rh பாஸிடிவ் மற்றும் Rh நெகடிவ் என்று இரண்டு வகை.

ஒரு வகை குரங்கின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதே Rhesus என்பதாகும். இதனால் நாம் அதை Rh என்று கூறுகிறோம்.

கர்ப்பமாக இருப்பவர்கள் Rh பாஸிட்டிவாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை. உலகில் மிக குறைந்த பேர் தான் Rh நெகடிவ்வாக இருப்பார்கள்.

மனைவியின் இரத்தம் Rh நெகட்டிவ்வாக இருந்து, கணவனின் இரத்தம் Rh பாஸிட்டிவாக அமைந்துவிட்டால் பிரச்சனை.

டெலிவரி நேரத்தில் தாயின் Rh நெகட்டிவ் ரத்தத்தில் குழந்தையின் Rh பாஸிட்டிவ் ரத்தம் கலக்கும்போது எதிர்வினையை உருவாக்குகிறது.

இதனால் முதல் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவது இல்லை மற்றும் தாயின் உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது.

இதனால் இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும்போதோ, அல்லது பிறந்த பின்போ குழந்தைக்கு மஞ்சள்காமாலை, இரத்தச்சோகை என்று கடுமையான நோய்கள் உண்டாகி பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதைத் தடுக்க Rh நெகட்டிவ் இரத்தம் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாவது மாதத்தில் கண்டிப்பாக தடுப்பூசிப் போட வேண்டும்.

தற்போது நவீன டெக்னாலஜி மூலம் கருப்பையில் உள்ளக் குழந்தையின் இரத்தத்தை மாற்றுமளவுக்கு நாம் முன்னேறி விட்டோம்.

இந்த ஊசியைப் முதல் குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள்ளும் போடலாம். இருந்தாலும் முன்பே போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments