கர்ப்பக் கால பெண்களின் கவனத்திற்கு!

Report Print Printha in கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் தங்களுடைய உடல் நலனை கருதி, கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு அதற்கேற்ப சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிகவும் அவசியமாகும்.

ஏனெனில் கர்ப்பிணி பெண்கள் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் அது அவர்களின் நஞ்சுக்கொடி வழியாக கருவில் இருக்கும் குழந்தையை சேருகின்றது.

மேலும் கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான உணவுகள் மற்றும் இதர தேவைகளை வழங்கும் பணியை நஞ்சுக்கொடி தான் செய்கிறது.

ஆரோக்கிய குழந்தையை பெற தாய்மார்கள் கவனிக்க வேண்டியவை
  • ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க நினைக்கும் தாய்மார்கள், தங்களின் அன்றாட உணவில் சத்துமிக்க உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
  • கர்ப்பிணிகளுக்கு வழக்கத்தை விட கால்சியம் சத்து அதிகமாக தேவைப்படும் என்பதால் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கக்கூடிய உணவு வகைகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
  • கர்ப்பிணிகள் பால் குடிக்கும் போது, அதில் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பருகுவது மிகவும் சிறந்ததாக இருக்கும்.
  • அன்றாட உணவில் கர்ப்பிணி பெண்கள் பருப்பு, பீன்ஸ், பயறு வகை கள் இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, அதற்கு வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும்.
  • கர்ப்பிணிகள் டீ, காபி அதிகமாக குடித்து வந்தால் கருச்சிதைவு பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இதனால் பிறக்கும் குழந்தைய்ன் எடை குறைவாக இருக்கும். எனவே கர்ப்பக் காலத்தில் அதிகமாக காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இரும்பு சத்து அதிகமாக தேவைப்படுவதால், கீரை, கொழுப்புக் குரைவான இறைச்சி இது போன்ற இரும்புசத்து மிக்க உணவு பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். இதனால் நீர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் நீரின் அளவை சமநிலைப் படுத்துகிறது.
  • கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது சருமத்தின் வறட்சியிலிருந்து மீட்டு ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
  • கர்பக் காலத்தில் இருகும் பெண்கள் முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் அதில் உள்ள புரதச்சத்து க்கள், நமது உடலுக்கு தேவையான அமினோ அமிலத்தையும் கொடுக்கிறது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments