கர்ப்பிணி பெண்களிடம் இதை மட்டும் கேட்டு விடாதீர்கள்

Report Print Printha in கர்ப்பம்

குழந்தை கருவில் வளரும் போதே வெளியில் பேசக்கூடியதை உள்வாங்கிக் கொள்ளும்.

அதனால் கர்ப்பமாக உள்ள பெண்களிடம் மனம் வருந்தக் கூடிய சில வார்த்தைகளை பேசி விடக்கூடாது.

ஏனெனில் அதனால் அவர்களுக்கு ஏற்படும் மன பாதிப்புகள் வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கும்.

கர்ப்பிணி பெண்களிடம் பேசக் கூடாதவை?
  • பிரசவிக்கும் போது வலி அதிகம் ஏற்படும், நீ அதை தாங்கிக் கொள்வாயா? என்பது போல கர்ப்பமாக உள்ள பெண்களிடம் கேட்கக் கூடாது. ஏனெனில் அது அவர்களை மனதளவில் பாதிக்கும்.
  • கர்ப்பக் காலத்தில் ஒவ்வொரு பெண்களுக்கும் வயிற்றின் அளவு வேறுபடும். அதனால் வயிறு சிறியதாக உள்ள கர்ப்பிணிகளிடம் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா? என்று கேட்கக் கூடாது.
  • எதிர்மறையை குறிக்கும் முடியாது, கடினம், தோல்வி, நஷ்டம் ஆகிய வார்த்தைகளை எப்போதும் கர்ப்பிணிகள் முன்பு பேச வேண்டாம். ஏனெனில் அது கருவில் உள்ள குழந்தையின் குணாதிசயத்தை மாற்ற வாய்ப்புள்ளது.
  • வயிறு பெரிதாய் இருந்தால் ஆண், இல்லையென்றால் பெண் என்று கூறக் கூடாது. ஏனெனில் அதன் படி, அவர்களின் ஆசைகள் அதிகரித்து, குழந்தை பிறந்த பின் நினைத்தபடி இல்லையெனில் அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • உணவு விடயத்தில் சாப்பிட ரொம்ப கஷ்டமாக உள்ளதா இன்னும் சிறுது நாட்கள் தான் என்று கூறி, அவர்களின் ஏக்கத்தை அதிகரிக்க கூடாது. இதுவும் கர்ப்பிணி பெண்களின் மனதை பாதிக்கும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers