இது கர்ப்பிணிகளுக்கானது! குழந்தை ஆரோக்கியமாக வளர இதை செய்திடுங்கள்

Report Print Printha in கர்ப்பம்
137Shares
137Shares
lankasrimarket.com

கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் ஒவ்வொரு விடயத்திலும் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதுவும் உணவு விடயத்தில் அதிக கவனம் வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் குடிக்க வேண்டிய பானங்கள்?
 • கர்ப்ப காலத்தில் நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், சிறுநீரக பாதையில் உண்டாகும் தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
 • கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எலுமிச்சை சாற்றை குடிப்பதால், கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் வரும் காய்ச்சலை போக்க உதவுகிறது.
 • கர்ப்பிணிகள் தினமும் இளநீரை குடிப்பதால் உடல் நீரில்லாமல் வறட்சி அடைவதை தடுத்து, ரத்த அழுத்தம் அதிகரிக்காமலும் பாதுக்காக்கிறது.
 • மோர் கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்த ஒரு நீர் ஆகாரமாகும். இதை குடிப்பதால் கால்சியம் சத்து அதிகரித்து குழந்தையின் எலும்புகள் வலிமையாகும்.
 • கேரட் ஜூஸை கர்ப்ப காலத்தில் குடிப்பது மிக நல்லது. இதனல உடலின் ஆற்றல் அதிகமாகி, உடல் சோர்வை போக்குகிறது.
 • ஆரஞ்சு ஜூஸ் மற்றும் ஆப்பிள் ஜூஸை கர்ப்ப காலத்தில் பருகினால் தாய் மற்றும் குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 • ப்ரோகோலி, முட்டைக்கோஸ் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற ஜூஸ் வகைகளை தினமும் குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறலாம்.
 • கர்ப்பிணி பெண்களுக்கு புதினா டீ மிகவும் சிறந்தது, கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் ஏற்படும் உடல் சோர்வை போக்க உதவுகிறது.
 • கர்ப்பிணி பெண்கள் தினமும் இரவு உறங்கும் முன் பால் குடிக்க வேண்டும். இதனால் நல்ல தூக்கம் வரும்.
 • ஒரு பாத்திரத்தில் சியா விதைகளை போட்டு அதனை நன்றாக 10 நிமிடங்கள் ஊற வைத்து அந்த நீரை கர்ப்பிணிகள் பருகி வந்தால் உடல் வலிமையாகும்.
 • சிவப்பு காராமணி காராமணியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய புரோட்டீன் ஏராளமாக உள்ளது. எனவே எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளதால், இதனை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம்.
 • பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை தினமும் எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதுடன், குடலியக்கம் சீராகும்.
 • தேங்காய், நட்ஸ்களில் பாதாம் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை கர்ப்பிணிகள் தினமும் ஒருமுறை எடுத்து வர வேண்டும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்