கர்ப்பம் உறுதி ஆனதும் இந்த பழங்களை சாப்பிடாதீர்கள்

Report Print Printha in கர்ப்பம்

கர்ப்பக் காலத்தில் உள்ள பெண்கள் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையையும் ஆரோக்கியத்துடன் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

அதற்கு உணவுக்கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். அதனால் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த பின் ஒருசில பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

பப்பாளி

கர்ப்பமாக இருக்கும் போது பாப்பாளிப் பழம் சாப்பிடவே கூடாது. ஏனெனில் அது பிரசவ திகதிக்கு முன்னரே பிரசவம் நடப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும்.

எனவே கர்ப்பம் அடைந்த மூன்று மாதத்திற்குள்ளும், கடைசி மாதத்திலும் பப்பாளியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் அதிகப்படியான ப்ரோமிலைன் உள்ளது. இவை கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. ஏனெனில் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கரு கலைந்து விடும்.

திராட்சை

கர்ப்பிணிகள் திராட்சை பழத்தை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் ஏராளமான ரசாயனங்கள் தெளிக்கப்பட்டிருக்கும் என்பதை விட, திராட்சையில் உள்ள அதிக அமிலத்தன்மை சில உடல்நலக் குறைவு பாதிப்புகளை உண்டாக்கும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள், மாதவிடாயை வர வைத்து விடுவதால், அது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும். எனவே கர்ப்பத்தின் போது கத்திரிக்காயை சாப்பிடவே கூடாது.

பெருஞ்சீரகம்

கர்ப்பிணிகள் பெருஞ்சீரகம் மற்றும் மல்லி விதைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை அதிகமானால் கர்ப்பப்பையின் வலிமை குறையும் வாய்ப்புகள் உள்ளது.

எள் விதைகள்

கர்ப்பிணிகள் எள் விதைகளை சாப்பிடக் கூடாது. ஏனெனில் இது சிலருக்கு கர்பப்பையின் தசைகளை தளர்த்தி, கருகலைப்பை ஏற்படுத்திவிடும்.

வெந்தயம்

வெந்தயத்தில் உள்ள தாதுக்கள், கர்பப்பையை வலுவிழக்க செய்து அலர்ஜியை உண்டாக்கி, வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும். எனவே கர்ப்பமாக இருக்கும் போது வெந்தயம் சாப்பிடக் கூடாது.

முட்டை

கர்ப்பிணிகள் சமைக்காத பச்சை முட்டை மற்றும் ஆஃப் பாயில் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள சால்மோனெல்லா(salmonella) என்ற பாக்டீரியா உணவை விஷமாக்கி விடும். அதனால் சில நேரத்தில் வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, வயிற்று வலி போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

முளைகட்டிய பயிறு

பயிறு மற்றும் தானிய வகைகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும் முளைகட்டிய பயிறு வகைகளை பச்சையாக அப்படியே சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள பாக்டீரியா பல்வேறு பிரச்சனையை உண்டாக்கும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers