பெண்களின் மலட்டுத்தன்மை: முகத்தை வைத்து கண்டுபிடிக்கலாம்

Report Print Printha in கர்ப்பம்
181Shares

ஒரு பெண் தன் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி தனது கருவுறுதல் ஆரோக்கியத்திலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

கருவுற முடியாத நிலைக்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால் அதை ஒருசில அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

மலட்டுத்தன்மை உள்ளதை கண்டுபிடிப்பது எப்படி?

  • முகத்தில் முகப்பருக்கள் வருவது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும், அதிகப்படியான முகப்பருக்கள் முகத்தில் தெரிந்தால், பெண்களின் மலட்டுத் தன்மையை வெளிப்படுத்தும்.

  • ஆண்களுக்கு உள்ள டெஸ்ட்ரோன் ஹார்மோன் பெண்களுக்கு அதிகம் சுரந்தால், அவர்களின் உதடுக்கு மேல் பகுதி, கன்னங்களில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். இது மலட்டுத்தன்மை உள்ளதை குறிக்கும்.

  • ஃபைப்ராய்டுகள் பொதுவாக பெண் கருவுறாமையை உண்டாக்கும். எனவே அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு உண்டானால் உடனடியாக மருத்துவரிடம் தீர்வு காண வேண்டும்.

  • பெண்களின் மாதவிடாய் ஒழுங்கான முறையில் நடைபெற்றால் மட்டுமே பெண்களுக்கு கருவுறும் தன்மையில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.

  • கர்ப்பக் குழாயில் உண்டாகும் தழும்புகளானது கருமுட்டை கர்ப்பப்பையை அடைய சிரமத்தை உண்டு செய்யும். அதனால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வர அதிக வாய்ப்புள்ளது.

  • உடலுறவின் போது அல்லது உடலுறவுக்கு பின் அசாதாரண வலியை உணர்ந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதனால் கருவுறாமை உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

  • பெண்களின் உடல் எடை வேகமாக அதிகரித்து வந்தால், அது கருவுறாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே உடல் எடையில் அசாதாரண மாற்றம் தெரிந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.

  • முடி உதிர்வு இயல்பான ஒரு பாதிப்பாக இருந்தாலும், அதுவே மிக அதிகமாக முடி உதிர்ந்தால், அது தைராய்டு பிரச்சனைகள், அனிமியா, சொரியாஸிஸ் அல்லது கருவுறுதல் தொடர்பான பிரச்சனையாக கூட இருக்கலாம்.

மலட்டுத்தன்மையை தடுக்க என்ன செய்யலாம்?

  • அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பெண் மலட்டுத்தன்மை பிரச்சனை குறையும்.

  • அத்திப்பழத்தை பால் அல்லது தேன் உடன் கலந்து தொடர்ந்து காலையில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்