பெண்களுக்கு கர்ப்பம் தங்காமல் போவதற்கான முக்கிய காரணங்கள்

Report Print Jayapradha in கர்ப்பம்

திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். கர்ப்பம் தரிப்பது பெண்ணிற்கு மகிழ்ச்சி தரும் ஒரு உன்னதமான தருணம். ஆனால் அந்த மகிழ்ச்சி எல்லா பெண்களுக்கும் நீடிப்பதில்லை.

சிலருக்கு திடீரென அடிவயிற்றில் தாங்க முடியாத வலி, ரத்தப் போக்கு உண்டாகும். ஏனென்று பரிசோதித்தால் கர்ப்பம் கலைந்திருக்கும்.

அத்தகைய கர்ப்பம் தங்காமல் கலைந்து போவதற்கான முக்கியமான காரணங்களும் மற்றும் அதற்கான தீர்வுகளையும் பற்றி பார்ப்போம்

இயல்பற்ற குரோமோசோம்

கருக்கலைப்பிற்கு முக்கிய காராணம் பெண்ணின் கருவிடம் ஆணின் விந்தணு சேரும்போது இருவரின் குரோமோசோம் சரியான விதத்தில் இணையவில்லையென்றால், அங்கே கருக்கலைப்பு உண்டாகும்.

தீர்வு

இத்தகைய சூழ்நிலையில் விந்தணு மற்றும் கருவை பரிசோதித்து குரோமோசோமில் உள்ள பாதிப்பை நீக்க தகுந்த சிகிச்சை கொடுத்தால் நிச்சயம் அழகான குழந்தையை பெறுவீர்கள்

கர்ப்பப்பை மற்றும் அதன் வாய்

கர்ப்பப்பை இயல்பான வடிவத்தில் இல்லாமல் அசாதரணமாக வித்யாசமான வடிவத்தில் இருந்தாலோ அல்லது கர்ப்பப்பையின் வாய் பலஹீனமாக இருந்தாலும் கரு பையில் தங்காது. இந்த பாதிப்பிற்கு யூடரின் செப்டம் என்று பெயர்.

தீர்வு

இந்த யூடரின் செப்டம் பிரச்சனையை அறுவை சிகிச்சை முறையில் சரி செய்துவிடலாம். அதே போல் கர்ப்பப்பை வாய் அகலமாக அல்லது பலஹீனமாக இருந்தால் அதனை சரியான வடிவத்தில் தைத்து, கருவை தங்கச் செய்து விடுவார்கள்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தில் கோளாறு

நம் உடலில் கிருமிகளோ அல்லது உடல் சம்பந்தமல்லாத வேறோரு பொருளோ உள்ளே சென்றால் நம் நோய் எதிர்ப்பு மண்டலம் எதிர்ப்பு காண்பிக்கும். இப்படி சில பெண்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் காட்டும் எதிர்ப்பின் விளைவாக கருக்கலைப்பு உண்டாகும்

தீர்வு

இதற்கு சில ஸ்டீராய்டு மருந்துகளை கொண்டு சிகிச்சையில் வெற்றி பெற்றதாக மருத்துவர் கூறுகிறார்.

தைராய்டு மற்றும் சர்க்கரை வியாதி

தைராய்டு பிரச்சனை மற்றும் சர்க்கரை வியாதி இரண்டுமே கர்ப்பப்பையை நல்ல சூழ் நிலைக்கு வைத்திருக்க உதவாது. இவற்றால் கருக்கலைப்பு அதிக சாத்தியம் உள்ளது.

தீர்வு

இதற்குசரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுதல் அவசியம். ஹார்மோன் மற்றும் குளுகோஸின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் குழந்தைக்கான சாத்தியம் உருவாகும்.

பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS)

இந்த கோளாறு பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகிறது. அதிக உடல் பருமன், மீசை வளர்தல், ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் அதிகமாக சுரத்தல், முறையற்ற மாதவிடாய் ஆகியவை பெண்ணிற்கு ஏற்படும்.

தீர்வு

ஆன்டிபயாடிக் சிகிச்சையின் மூலம் (PCOS) வினால் உண்டாகும் கருக்கலைப்பை மிகவும் சுலபமான முறையில் சரி செய்துவிடலாம்.

பக்டீரியா தொற்று

பெண் அல்லது ஆணின் பிறப்புப் பாதையில் பக்டீரியா தொற்று உண்டாகியிருந்தால் அவை கருவை பாதித்து கருக்கலைப்பிற்கு காரணமாகிவிடும்.

தீர்வு

இதற்கு தகுந்த ஆன்டிபயாடிக் எடுத்துக் கொண்டால் சரி செய்துவிடலாம்.

புகை மற்றும் மதுப் பழக்கம்

நிகோடின் தொப்புள் கொடியின் மூலம் கருவிற்கு தாயிடமிருந்து செல்லும் ரத்தத்தை தடுத்துவிடும். இதனால் போதிய ரத்தம் இல்லாமல் கரு முழுதாக உருவாக முடியாமல் கலைந்து போய்விடும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers