மார்பகத்தில் மாற்றம்: பெண்களுக்கான மிக முக்கியமான தகவல்

Report Print Fathima Fathima in கர்ப்பம்

ஒரு பெண் கர்ப்பம் அடைந்திருக்கும் போது ஏற்படும் மாற்றங்களில் மிக முக்கியமானது மார்பக வளர்ச்சி.

தாய்ப்பால் சுரப்புக்கு ஏற்றவாறு மார்பகங்களில் மாற்றம் ஏற்படும், எனவே மார்பகத்தையும், மார்பக காம்பையும் சுத்தமாக பராமரித்தால் மட்டுமே ஆரோக்கியமான தாய்ப்பால் குழந்தைக்கு கிடைக்கும்.

மாற்றங்கள் என்ன?
  • மார்பக காம்புகளில் சுருக்கென்று குத்துவது போன்ற ணர்வு
  • மார்பக தோல்களில் அரிப்பு மற்றும் தழும்புகள்
  • நீல மற்றும் பச்சை நிற இரத்த நாளங்கள் வெளியே தெரியலாம்
  • குழந்தை பிறப்புக்கு முன் சீம்பால் வருவது
  • இதுதவிர மார்பகத்தில் கட்டிகள் இருப்பது போன்று இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்
  • மார்பக காம்புகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கருப்பாவதுடன் முடி வளரலாம்
  • சின்ன சின்ன பருக்கள் தோன்றி வலியை ஏற்படுத்தும்
பராமரிப்பது எப்படி?
  • கர்ப்ப காலத்தில் சரியான ள்ளாடையை தேர்வு செய்து அணிவது அவசியம்.
  • வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்து விடலாம்.
  • குளிக்கும் போது ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலை கொண்டு மார்பக காம்புகளை இழுத்து விடுவதன் மூலம் பால் சுரப்பை அதிகரிக்கலாம்.
  • கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம், சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers