ஒரு பெண் கர்ப்பம் அடைந்திருக்கும் போது ஏற்படும் மாற்றங்களில் மிக முக்கியமானது மார்பக வளர்ச்சி.
தாய்ப்பால் சுரப்புக்கு ஏற்றவாறு மார்பகங்களில் மாற்றம் ஏற்படும், எனவே மார்பகத்தையும், மார்பக காம்பையும் சுத்தமாக பராமரித்தால் மட்டுமே ஆரோக்கியமான தாய்ப்பால் குழந்தைக்கு கிடைக்கும்.
மாற்றங்கள் என்ன?
- மார்பக காம்புகளில் சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வு
- மார்பக தோல்களில் அரிப்பு மற்றும் தழும்புகள்
- நீல மற்றும் பச்சை நிற இரத்த நாளங்கள் வெளியே தெரியலாம்
- குழந்தை பிறப்புக்கு முன் சீம்பால் வருவது
- இதுதவிர மார்பகத்தில் கட்டிகள் இருப்பது போன்று இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்
- மார்பக காம்புகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கருப்பாவதுடன் முடி வளரலாம்
- சின்ன சின்ன பருக்கள் தோன்றி வலியை ஏற்படுத்தும்
பராமரிப்பது எப்படி?
- கர்ப்ப காலத்தில் சரியான உள்ளாடையை தேர்வு செய்து அணிவது அவசியம்.
- வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்து விடலாம்.
- குளிக்கும் போது ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலை கொண்டு மார்பக காம்புகளை இழுத்து விடுவதன் மூலம் பால் சுரப்பை அதிகரிக்கலாம்.
- கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம், சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.