கர்ப்ப காலத்தில் இரத்த சோகை பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்க

Report Print Kavitha in கர்ப்பம்

கர்ப்பம் தரித்த சில பெண்களுக்கு கர்ப்பக்காலங்களில் இரத்த சோகை ஏற்படுவதுண்டு.

இரத்த சோகை இரத்தத்தில் இரும்பு சத்து குறைபாடு தோன்றுவதும் போதுமான அளவு வைட்டமின் பி 12 இல்லாமல் இருப்பதன் காரணமாக ஏற்படுகின்றது.

கர்ப்ப காலத்தில் பாரம்பரிய காரணங்களால் பெண்களுக்கு இரத்த சோகை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

இரத்த சோகை உண்டாவதால் கருவில் உள்ள குழந்தையில் வளர்ச்சியில் பாதிப்பு உண்டாகிறது.

மேலும் கர்ப்ப காலத்தில் இரத்த சோகையைத் தடுக்க உதவும் உணவுகள் பற்றி இங்கு பார்ப்போம்.

  • இரண்டு அத்தி பழம், இரண்டு பேரிட்சை, காய்ந்த‌ திராட்சை இவை மூன்றையும் தினம் காலையில் சாப்பிட‌வேண்டும். இது முன்றையும் சேர்த்து அல்வாவாக‌வும் செய்து சாப்பிட‌லாம்.
  • புரோகோலி சூப், பொரிய‌ல், புரோகோலி பீஃப் போன்ற‌வை சாப்பிட‌லாம். இந்த புரோகோலியில் அதிக இரும்பு சத்து உள்ளது.
  • ஏதாவ‌து ஒரு கீரை சிறு ப‌ருப்பு சேர்த்து கூட்டு வைத்து அல்லது பிர‌ட்டியோ க‌றியுட‌ன் சேர்த்தோ சாப்பிட‌லாம்.
  • கொத்தும‌ல்லி, க‌றிவேப்பிலை அரைத்து, துவையலாக‌ அல்லது ர‌ச‌ம் வைத்து சாப்பிட‌லாம்.
  • ப‌யிறு வ‌கைக‌ளை ஊற‌வைத்து அடையாக‌ சுட்டு சாப்பிட‌லாம்.
  • கேழ்வ‌ர‌கில் பான‌ம், புட்டு, இனிப்பு அடை போன்ற‌வை சாப்பிட‌லாம்.
  • பீட்ரூட் ஜூஸ், பொரியல், சாலட், பீட்ரூட் வித் கீமா கடலைபருப்பு சேர்த்து கறி பண்ணி சாப்பிடலாம்.
  • இரவில் மட்டும் லேசான ஆகாரங்கள் உண்பது நல்லது அதுவும் 7 லிருந்து 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து கொள்ளவும்.
  • ஒரு நாளைக்கு முன்று ட‌ம்ள‌ர் பால் அருந்துவ‌து ந‌ல்ல‌து. இது குழ‌ந்தை வ‌ள‌ரும் ச‌மய‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு தேவையான கால்சிய‌ம் ச‌த்து கிடைத்து விடும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்