உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு பிரசவத்தின் போது பிரச்சனை ஏற்படுமா?

Report Print Kavitha in கர்ப்பம்

அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கூடுதல் எடையுடன் குழந்தைகள் பிறந்தால் அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து காப்பாற்ற வேண்டிய நிலை உண்டாகும். பல்வேறு நோய் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தையாக வளர அதிக வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமின்றி கூடிய விரைவில் இதயம் சார்ந்த பிரச்னைகளை தாய் மட்டுமல்லாது குழந்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

பருமனான பெண்களுக்கு சிசரியன் வாய்ப்பு அதிகம் இருப்பதனால் சிசரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுகிறார்கள்.

அதிக ரத்தப்போக்கால் உடலில் ரத்த அளவு குறைந்து போவது, அறுவைச் சிகிச்சை செய்யப்படும் வயிற்றுப் பகுதியில் புண் நாளடைவில் ஆறாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

எடை அதிகரிக்காமலும் ஆரோக்கியமாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும்?
  • சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமானது பசி வரும் போது சாப்பிட்டு விட வேண்டும். பசி வந்து நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • அடிக்கடி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை பாதுகாப்புடன் சுமந்திருக்கும் பனிக்குடத்திற்கு பெரிதும் உதவுகிறது.
  • ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் அதாவது இரண்டரை முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.
  • நிறைய நடக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் .
  • உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நடைபயிற்சி மற்றும் சில முக்கியமான உடற்பயிற்சிகளை தகுந்த முறையில் செய்ய வேண்டும்.
  • உங்களது உடலின் தசைகளை உரிய முறையில் வலுப்படுத்தவும், இயங்க வைக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. மேலும், குழந்தை சரியான பொசிஷனில் இருப்பதற்கும் இது உதவுகிறது. இயற்கை பிரசவத்திற்கு அது வழி கோலும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers