கனிந்த பப்பாளி பழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது நன்மையா?

Report Print Kavitha in கர்ப்பம்

பொதுவாக கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிட கூடாது என பலரும் கூறுவதுண்டு.

கனிந்த பப்பாளி பழங்கள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட உகந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

அதுமட்டுமின்றி நன்கு கனியாத பப்பாளி பழங்கள் சாப்பிட ஏற்றதில்லை. இந்த வகை காய் வெட்டான பழங்கள் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது குளிர்ச்சி தன்மையான உணவுகளைச் சாப்பிடும் பொழுது கர்ப்பிணிப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

கனிந்த பப்பாளி பழங்களில் விட்டமின் ஏ, விட்டமின் பி, கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகளும் இதில் உள்ளது.

கனிந்த பப்பாளி பழங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளைத் தருகின்றன.

மேலும் கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் நிறைய பலன்கள் ஏற்படுகின்றன என கூறப்படுகின்றது.

கனிந்த பப்பாளி பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து, கர்ப்ப காலத்தில் ஏற்படும் மசக்கை தொல்லையைத் தவிர்க்க உதவுகிறது.

அதுமட்டுமின்றி கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் , மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காப்பாற்றுகின்றது.

இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் கனிந்த பப்பாளி சாப்பிடுவது நல்லது என சொல்லப்படுகின்றது.

முக்கிய குறிப்பு

கர்ப்பகாலத்தின் முதல் நிலையில் இருக்கும் பெண்கள் இந்த வகை பப்பாளிகளைச் சாப்பிடக்கூடாது.

ஏனென்றால் இதை எடுத்துக்கொள்வதால் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் கர்ப்பப்பை சுருங்கி விரிய துணைபுரிகிறது. இதனால் கருச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...