கர்ப்பத்தின் போது ஏற்படும் கால் வீக்கம் ஏன் வருகின்றது? அதனை எப்படி சரி செய்வது?

Report Print Kavitha in கர்ப்பம்

பொதுவாக கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றது.

இதன் காரணமாக கர்ப்பத்தின் போது பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான்.

இது கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ச்சியாக நிற்கும் பொழுது இரத்த ஓட்டம் சரியானபடி இருக்காது . இதன் காரணமாக கால் வீக்கம் ஏற்படுகின்றது எனப்படுகின்றது.

எப்படி சரி செய்வது?
  • பெண்கள் நெடுநேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பொதுவாக அதிக வெயில் அடிக்கும் மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து கொள்ளவும்.
  • கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் மூன்று நான்கு வேளைகளில் 15 நிமிடம் என்ற நேர அளவில் கால்களைத் தலையணைக்கு மேலே உயர்த்தி வைக்கலாம். இதனால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால் வீக்கம் குறையும்.
  • சற்று மென்மையான ரகம் கொண்ட காலணிகளை அணிவது சிறந்தது.
  • கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் போதிய தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்வது அவசியம்.
  • ஈரத்துணியை கொண்டும் அல்லது ஐஸ் கட்டி (Ice pack) கொண்டு நன்கு ஒத்தரம் கொடுக்கலாம்.
  • கட்டுப்பாடான அளவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளும் பொழுது, கர்ப்பிணிப் பெண்களின் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கும். இதன் விளைவாக அவர்களின் கால் வீக்கம் குறையும்.
  • ஊட்டச்சத்து பொட்டாசியத்தை போதிய அளவிற்கு உடலில் கிடைக்கச் செய்வதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்யலாம்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்