குழந்தை பெற்றுக் கொள்ளும் முன் அவசியம் செய்யவேண்டிய 7 படிகள்

Report Print Givitharan Givitharan in கர்ப்பம்

திருமணத்தின் பின்னர் குழந்தைகளை எப்போது பெற வேண்டும் என்பது குறித்த தம்பதிகளின் தீர்மானமாகும்.

எனினும் இத் தீர்மானத்தை எடுக்கும்போது அவசியம் சில படிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இப்படிமுறைகளை பின்பற்றுவதனால் குழந்தை வளர்ப்பில் ஏற்படும் அசௌகரியங்களை இலகுவாக எதிர்கொள்ள முடியும்.

முதற்படியாக மகப்பேற்று மருத்துவரை நாட வேண்டும்

இதன்போது வெற்றிகரமான கருத்தரித்தல் தொடர்பான ஆலோசனைகள், கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய இடர்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை பெற முடியும்.

தவிர 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது உடலியல் பிரச்னை உள்ளவர்கள் கர்ப்பம் தரித்தலின்போது எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பான விளக்கங்களையும், தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அடுத்ததாக குடும்ப அங்கத்தவர்களின் பிறப்புக்கள் தொடர்பான மருத்துவப் பதிவுகளை ஆராய்தல்.

இதன்போது பரம்பரை நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் பற்றியும், நாட்பட்ட நோய்கள் மற்றும் கருத்தரித்தல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடிவதுடன் அதற்கு ஏற்றால்போல் திட்டமிட முடியும்.

செலவுகள் தொடர்பாக சிந்தித்தலும் திட்டமிடலும்

கருத்தரிப்பு தொடர்பான பரீட்சிப்பு, மாதாந்தம் வைத்தியரிடம் சென்று தாய், சேய் ஆரோக்கியம் தொடர்பில் பரீட்சித்தல் போன்று குழந்தையை பெற்றெடுக்கும் வரையிலும் செலவுகள் அடுத்தடுத்து காணப்படும்.

எனவே இச் செலவுகளை முன்கூட்டியே திட்டமிடுவதனால் இறுக்கட்டத்தில் ஏற்படக்கூடிய மன அழுத்தம் மற்றும் தேவையற்ற தொந்தரவுகளை தவிர்க்க முடியும்.

தேவையான ஊட்டச் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுதல்

கர்ப்பகாலத்தில் சிசு ஆரோக்கியமாக வளர்வதற்கு கர்ப்பிணித் தாய்மார்கள் விட்டமின், ஊட்டச்சத்து நிரம்பிய மாத்திரைகள், உணவுகளை உள்ளெடுக்க வேண்டும்.

மேலும் போலிக் அசிட்டினை உள்ளெடுப்பதனால் குழந்தைப் பேற்றின இலகுவாக்கிக்கொள்ளவும் முடியும்.

பல் வைத்தியரை நாடுதல்

கர்ப்பகாலங்களில் பெண்களுக்கு பல் தொடர்பான பிரச்னைகள், ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இக் காலத்தில் பல் வைத்தியரை நாடுவதன் மூலம் இப் பிரச்னைகள் தொடர்பில் முற்கூட்டிய பாதுகாப்பினை பெற முடியும்.

Kegels வகை உடற்பயிற்சியினை மேற்கொள்ளல்

சுகப்பிரசவம் நிகழ்வதற்கு கண்டிப்பாக சிறிய உடற்பயிற்சிகளை அன்றாடம் 30 முதல் 45 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

அவ்வாறில்லாவிடின் வீட்டிலுள்ள சிறு வேலைகளை செய்துவர முடியும்.

அதேபோன்று Kegels எனப்படும் இடுப்பிற்கான உடற்பயிற்சியையும் செய்துவரலாம். இது பிரசவத்தின்போது அதிக வலி உண்டாவதை குறைக்கின்றது.

குழந்தை வளர்ப்பு

இறுதியாக... குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. அது வாழ்நாள் முழுவதும் உள்ள ஒரு கட்டுப்பாடு ஆகும்.

எனவே குழந்தை தொடர்பான அனைத்து பொறுப்புக்கள் மற்றும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்க எந்தவித பயமும் இன்றி உங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்