பிரசவத்துக்கு பின் மாதவிடாய்!... பெண்களுக்கான முக்கிய தகவல்

Report Print Fathima Fathima in கர்ப்பம்

ஒரு பெண்ணுக்கு தாய்மை பருவமே அவளது வாழ்வுக்கு முழு அங்கீகாரத்தை கொடுக்கிறது.

குழந்தையின் முகத்தை பார்த்ததும் அவள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்தோடும், பிரசவத்துக்கு பின்னர் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், மன உளைச்சலால் பாதிக்கப்படும் பெண்களும் ஏராளம்.

இதற்கு இரவு கண்விழித்து குழந்தையை பார்ப்பது, தூக்கமில்லாமை, வேலை பளு என பல காரணங்களை குறிப்பிடலாம்.

இது தவிர பிரசவத்தின் பின் எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படலாம், இதற்கென எந்த திகதியையும், கால நேரத்தையும் குறிப்பிட முடியாது.

இதனை மகப்பேற்று இரத்தப்போக்கு என அழைக்கப்படுகிறது, இது பெண்களில் உடலில் இருக்கும் தேவையற்ற இரத்தமாகும்.

இது உங்களது மாதாந்திர மாதவிடாயை விட அடர்சிவப்பு நிறத்திலும் அதிக அளவிலும் இருக்கும்.

இறுதியில் இந்த மாதவிடாயானது இரத்தமாக இல்லாமல், அதிக உறைந்த நிலையிலும் உலர்ந்தும் இருக்கும்.

இது படிப்படியாக குறைந்து இறுதியில் நின்று விடும். சில பெண்களுக்கு இந்த சமயத்தில் மோசமான துர்நாற்றம் வீசியதாக கூறுகிறார்கள்.

இது ஒரு வார காலத்திற்குள் முடிந்து விடும், ஆனால் சில பெண்களுக்கு அதற்கு மேலும் எடுத்து கொள்ளலாம்.

இந்த வெளியேற்றங்களின் போது வலி ஏற்பட்டாலோ அல்லது எதாவது தொந்தரவு ஏற்பட்டாலோ அல்லது இரத்தம் கட்டிகளாக வெளியேறினாலோ மருத்துவரை சந்தியுங்கள்.

தாய்ப்பால் கொடுக்கும் போது மாதவிடாய் ஏற்படாதது ஏன்?

தாய்ப்பால் உடலில் உள்ள சுரப்பிகளை தூண்டுகிறது. குழந்தை தாயிடம் பால் குடிக்கும் போது, உடலில் புரோலேக்ட்டின் உற்பத்தி செய்யப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கிறது.

இது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருக்கும் வரை பாய்கிறது. புரோலேக்ட்டின் உடலிலிருந்து கரு முட்டை வெளிப்படுவதை தவிர்க்கிறது. இதனால் உங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது.

அப்படியே மாதவிலக்கு ஏற்பட்டாலும் குழந்தைக்கு பால் கொடுக்கலாம். இதனால் பாலின் சுவையில் மாற்றம் ஏற்படாது, பாலின் அளவு குறையலாம்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்