நஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா?

Report Print Kavitha in கர்ப்பம்

கர்ப்பிணிகளுக்கு காணப்படும் பிரச்னைகளுள் ஒன்று தான் இந்த நஞ்சுக்கொடி கருப்பை சுவர் நோக்கி வளர்வது மிகவும் ஆபத்தான ஒரு பிரச்னைகளுள் ஒன்றாகும்.

இது முப்பத்தைந்து வயது கடந்த பெண்களுக்கும் ஏற்கனவே சிசேரியன் செய்துக்கொண்ட பெண்களுக்கும், சிசேரியன் வடு அல்லது மற்ற பிற கருப்பை அறுவை சிகிச்சை காரணமாக இந்த பிரச்னை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்படுகிறது.

குறிப்பாக இது சிசேரியன் ஏற்கனவே செய்திருந்தால் இதற்கு முன்னாள் பிறப்பை நீங்கள் தந்திருந்தால் இப்பிரச்னை வரலாம்.

மேலும் நஞ்சுக்கொடி கருப்பையை முழுவதுமாகவோ அல்லது அரை நிலையிலோ சூழ்ந்திருக்கும் போது இந்த பிரச்னை உருவாகலாம்.

அதாவது கருப்பை சுவர் நோக்கி நஞ்சுக்கொடியானது நீண்ட தூரத்துக்கு வளர்ந்திருக்கும்.

கருப்பை சுவருடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடியை குழந்தை பிறந்தவுடனே நம்மால் காண முடியும். இதனால் அதிகமாக இரத்தம் வெளியிடப்படுகின்றது.

இதனை 3ஆவது மூன்று மாதத்தில் பிறப்புறுப்பிலிருந்து வெளியாகும் இரத்தம் கொண்டு தெரிந்துக்கொள்ள முடியும். இதன் போது மருத்துவரை பார்ப்பதே சிறந்தது.

அதுபோல் அடிக்கடி எழுப்பப்படும் பெரிய சத்தம் மூலமும் இந்த பிரச்னையை நாம் தெரிந்துக்கொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் அதிகம் வெளியேற தொடங்கும் மற்றும் பிறக்கும் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஒருவேளை நஞ்சுக்கொடி வளர்ந்து காணப்பட்டால் அப்போது மருத்துவர்கள் சிசேரியனுக்கு பரிந்துரை செய்வர். காரணம், இதனால் சுகப்பிரசவம் என்பது அவ்வளவு எளிதாக அமையாது என கூறப்படுகின்றது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்