கர்ப்பகாலத்தில் மூல நோய் ஏற்பட காரணம் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம்?

Report Print Kavitha in கர்ப்பம்
157Shares

பொதுவாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடல் பிரச்சனைகளில் மூல நோயும் ஒன்று. இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.

அந்தவகையில் இது ஏன் ஏற்படுகின்றது என்பதையும், இதனை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

ஏன் ஏற்படுகின்றது?

கர்ப்பிணிகளின் வயிற்றில் கரு வளர வளர அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படும். ஆசனவாய் குழாய்களில் அழுத்தம் ஏற்படுவதால் வீக்கம் உண்டாகும்.

இதனால் சில கர்ப்பணிகளுக்கு அக்காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது.

அதுமட்டுமின்றி சிலருக்குப் மரபியல் மூலமாகவும் மூலநோய் வரலாம்.

இதனை தடுக்க என்ன சாப்பிடலாம்?

  • ஆமணக்கு இலையை நெய் விட்டு இளஞ்சூடாக வதக்கவும். இரவு தூங்கும் முன்பு, மூலம் உள்ள இடத்தில் வைத்து உறங்கலாம்.

  • அரை ஸ்பூன் கடுக்காய் தூளை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து இரவில் குடிக்க வேண்டும்.

  • துத்திக் கீரையை நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு கடைய வேண்டும்.

  • வாரம் இரண்டு முறை மதிய உணவுக்குப் பின் சாப்பிட்டு வரலாம். நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும்.

  • காலையும் மாலையும் துத்தி இலையை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு விழுங்கிய வுடன் மோர் குடிக்கலாம்.

  • மதிய உணவில், 5 சின்ன வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாப்பிடும் பழக்கம் இருப்பவர் களுக்கு பைல்ஸ் வராது.

  • அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலை அதை நன்கு மென்று சாப்பிடவும். அந்த நீரையும் குடித்து விடுங்கள்.

  • மாதுளை தோலை சுத்தம் செய்து விட்ட பின் நீரில் போட்டு கொதிக்க விட்ட பின்னர் அதை வடிகட்டி அந்த நீரை குடித்து வரலாம்.

தவிர்க்க வேண்டியவை

சப்பாத்தி, பரோட்டா இரும்பு சத்து மாத்திரைகள் காரம், புளிப்பு உணவுகள் அதிகமான அசைவ உணவுகள் பீட்சா, பர்கர் சீஸ் உள்ள பேஸ்டி உணவுகள் பசை போல இழுக்கின்ற உணவுகள் மைதா உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்