பிரசவத்துக்கு பின் சந்திக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை வேண்டுமா? ஓமநீர் மட்டுமே போதுமே!

Report Print Kavitha in கர்ப்பம்

பொதுவாக தாய்மார்கள் பிரசவ காலத்திற்கு முன்பும், பின்பும் பல பிரச்சினைகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சந்திப்பதுண்டு.

மலச்சிக்கல், உடல் எடையில் மாற்றம், பால் சுரத்தல் போன்றவற்றில் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

இதனை எதிர்கொள்ள வேண்டும் என்றால் ஆரோக்கிய உணவுகளை எடுத்து கொள்வது அவசியம்.

அந்தவகையில் இதை எதிர்கொள்ள ஓமநீர் உதவும். அதுமட்டுமல்லாமல் இவை தாய்மார்களின் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளும் தருகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கர்ப்பகாலத்தில் பெண்கள் அதிக எடையை கொண்டிருப்பார்கள். இதனை குறைக்க ஒரு டம்ளர் நீருக்கு கால் டீஸ்பூன் அளவு ஓமத்தை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறியதும் குடித்துவர வேண்டும். இதை காலை அல்லது இரவு உணவுக்கு பிறகு குடிக்கலாம்.

  • கர்ப்பக்காலம் வரை வயிற்றில் குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு பிரசவக்காலத்துக்கு பிறகும் சோர்வு நீடிக்க செய்யும். இதனை போக்க ஓம நீர் உதவும். இந்த ஓம நீர் அழுத்தமான உடல் வலியை போக்கி உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

  • எதிர்ப்புசக்தி குறைந்த இளந்தாய்மார்களுக்கு உடலுக்கு தெம்பும் ஆரோக்கியமும் தேவை என்பதால் தினசரி ஒரு டம்ளர் வீதம் ஓம நீர் கொடுக்கலாம். இது உடலுக்கு எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க கூடும்.

  • கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் போக்க மருந்து மாத்திரைகளை காட்டிலும் ஓம நீர் நல்ல தீர்வாக இருக்கும். ஓம நீர் கொண்டே வயிற்றுபோக்கை குணப்படுத்த முடியும். வாய்வு போக்கவும் ஓமநீர் உதவும். பிரசவத்துக்கு பிறகு வாய்வு பிரச்சனை உண்டாக கூடும். ஓமநீர் வாய்வும் போக்கும்.

  • கர்ப்பப்பை அழுக்குகள் பிரசவக்காலத்துக்கு பிறகு தடையில்லாமல் வருவதற்கும் ஓம நீர் உதவுகிறது. ஓமநீர் பருகுவதால் கர்ப்பப்பை சுத்தம் ஆகிறது. அதன் பிந்தைய மாதவிடாய் காலமும் சீராக வர உதவுகிறது.

  • இளந்தாய்மார்கள் எடுத்துகொள்ளும் உணவு சீராக இருந்தாலும் குழந்தைக்கு அடிக்கடி ஒவ்வாமை, பால் கக்குதல் போன்றவை உண்டாகும். ஆனால் ஓம நீர் குடிப்பதால் அதன் நன்மை தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு சென்று செரிமானத்தை சிறப்பாக்க செய்யும். மேலும் தாய்ப்பால் சுரப்புக்கும் துணைபுரியும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்