பிரித்தானியாவில் திடீரென குறைந்த வீட்டு வாடகை கட்டணங்கள்:

Report Print Thayalan Thayalan in வீடு காணி
பிரித்தானியாவில் திடீரென குறைந்த வீட்டு வாடகை கட்டணங்கள்:
1520Shares
1520Shares
ibctamil.com

பிரித்தானியாவில் வீட்டு வாடகை கட்டணங்கள் அதிரடியாக பல பகுதிகளில் குறைந்துள்ளது.

பிரித்தானியாவின் ரியல் எஸ்டேட் முகவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், பிரித்தானியாவில் வீட்டு வாடகைகள் கணிசமாக குறைந்துள்ளது எனவும், அதிலும் முக்கியமாக தலைநகர் லண்டனிலும் வாடகை வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

லண்டனில் வாடகைகள் குறைந்திருந்தாலும் பிரித்தானியாவில் அதிக வாடகை வசூலிக்கபடும் நகரமாக லண்டனே இன்னும் திகழ்கிறது.

அங்கு மாதத்துக்கு வீட்டு செலவாக £1,203 ஆகிறது.

ஆனாலும், கடந்த மார்ச் மாதத்தில் இது £1,297 ஆக இருந்தது.

பிரித்தானியாவில் மலிவான வாடைகைக்கு கிடைக்கும் இடமாக வட கிழக்கு பகுதிகள் இருக்கிறது.

இங்கு சராசரியாக கடந்த மார்ச் மாதம் வாடகை £525ஆக இருந்துள்ளது. கடந்த 1 வருடத்தை விட இங்கு வாடகை கட்டணம் 3.1 சதவீதம் குறைந்துள்ளது.

லண்டனை தவிர அதிக மக்கள் வாழ விரும்பும் பகுதியாக கருதப்படும் தென் கிழக்கு பகுதிகளிலும் வாடகை கட்டணங்கள் கணிசமாக குறைந்துள்ளன.

இது ஒரு புறம் இருக்க பிரித்தானியாவின் சில பகுதிகளில் வாடகை கட்டணங்கள் ஏறுமுகமாக உள்ளன.

பிரித்தானியாவின் கிழக்கு பகுதிகளில் கடந்த வருடத்திலிருந்து 7.4 சதவீத அளவு வாடகைகள் உயர்ந்துள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 1.6 சதவீதம் வாடகை உயர்ந்துள்ளது.

அதாவது கிழக்கு பகுதியில் தற்போது சராசரியாக மாதத்திற்கு £883 செலவாகிறது.

வேல்ஸ் பகுதியில் மாதம் £800 என்ற அளவில் வாடகை கட்டணங்கள் உள்ளன.

இது குறித்து Your Move's lettings ரியல் எஸ்டேட் நிறுவனர் Valerie Bannister கூறுகையில், கடந்த மாதங்களில் தென் கிழக்கு பகுதிகளில் வாடகை கட்டணங்கள் உயர்வால் மக்களில் பல பேர் லண்டன் நோக்கி செல்ல முடிவெடுத்தனர்.

மலிவு வீட்டு வசதிகள் காரணமாக தற்போது தென் கிழக்கில் வாடகைகள் குறைந்திருந்தாலும், இந்த பகுதி நல்ல மதிப்புள்ள பகுதியாகவே வாடகைகாரர்களுக்கு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

news.lankasri.com பிரித்தானியா செய்தி

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

மேலும் வீடு காணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments