காதலால் தடம் மாறும் ஆண்கள்!

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
காதலால் தடம் மாறும் ஆண்கள்!

ஆண், பெண் என இருபாலருக்கும் வந்தால் மட்டுமே அது காதல், ஒரு தலையாக ஆண் மட்டும் காதலித்தால் அதனை ஒருதலைக்காதல் என்று சொல்வதை விட முட்டாள்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த உலகத்தில் ஒரு பெண்ணுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை தொலைப்பதற்கு ஆண்கள் வர்க்கத்தை கடவுள் படைக்கவில்லை.

ஒரு பெண்ணை பார்த்தவுடன் காதல் கொண்டீர்கள் என்றால், அதனை அவளிடம் தெரியப்படுத்துகையில் உங்கள் காதல் நிராகரிப்படும்போது, விட்டு விலகி செல்லுங்கள்.

உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ளுங்கள், அதைவிட்டு விட்டு பழிதீர்த்தல் எனும் நெருப்பில் விழுந்து உங்களை நீங்களே சாம்பலாக்கி கொள்ளாதீர்கள்.

மனதிற்கு பிடிக்காத, வாழ சகிக்காத, ஒருவனை பெண் எதற்காக ஏற்க வேண்டும்? அதனை புரிந்துகொள்ளாமல் ஒரு பெண்ணின் பின்னால் நீங்கள் சுற்றினால் மட்டும் உங்கள் காதல் கைகூடிவிடாது.

தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள் ஒரு தலைக்காதல் கொண்டால் அவர்களை நாயகர்களாக சித்தரித்துக்காட்டுகிறது இந்த சமூகம்.

பல ஆண்கள் சினிமா பாணியில் வாழ்க்கை என்னும் பயணத்தில் காதல் என்ற பூவை பறிக்க தெரியாமல் முள்ளில் கை வைத்து விட்டு பூவும் கருக, முள் குத்தி விரலில் ரத்தமும் வடிய.? வாழ்வை தொலைத்து விடுகிறான்.

சில ஆண்கள் மிக அழகாக காதலில் வெற்றி பெற்று வாழ்கின்றனர்.

உன்னை ஆத்மார்த்தமாக, உயிருக்கு உயிராக காதலிக்கிறேன், எனக்கு எல்லாம் நீதான் என்ற வசனங்கள் எல்லாம் திரையில் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள்,

நிஜ வாழ்க்கைக்கு, இது முற்றிலும் ஒத்துபோகாத உண்மை, அப்படி நிஜவாழ்க்கையிலும் இந்த வசனங்களை நம்பி காதல் கொண்டீர்கள் என்றால், பிரச்சனை ஜன்னல் வழியாக நுழையும்போது, இந்த காதல் வசனங்கள் கதவை திறந்துகொண்டு ஓடிவிடும் என்பதை நினைவில் கொள்க.

எனக்கு கிடைக்காத அவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என சினிமா பாணியில் களம் இறங்கி காரியத்தை சாதிப்பதை விட்டுவிட்டு, உங்கள் நிஜ வாழ்க்கைக்கு எது சாத்தியமாகுமோ அதனை கருத்தில் கொண்டு வாழக்கற்றுக் கொள்ளுங்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments