பெண்கள் ஆண்களிடம் காதலை சொல்ல தயங்குவது ஏன்?

Report Print Printha in உறவுமுறை

காதலை முதலில் சொல்வது ஆண்கள் தான், காதலித்தாலும் பெண்கள் வெளிப்படுத்தவே தயங்குவார்கள்.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்,

  • பெண்கள் காதலை மறுப்பதற்கு முதல் காரணமாக இருப்பது அவர்களின் பெற்றோர்கள் தான். ஏனெனில் பெற்றோர்கள் தன்னுடைய காதலை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் பெண்களிடம் அதிகமாகவே இருக்கின்றது.
  • உண்மையாக காதலிக்கும் பெண்கள் தான் விரும்பிய காதலனையே திருமணம் செய்துக் கொண்டு வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே இந்த பெண்களின் விருப்பத்திற்கு தடைகள் ஏதேனும் வந்துவிட்டால், வீட்டில் பார்ப்பவரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வந்துவிட்டால் என்று நினைத்தது தன்னுடைய காதலை சொல்லாமலே மனதில் மறைத்து விடுகிறார்கள்.
  • நமது சமுதாயம் மற்றும் ஒருசில பெற்றோர்கள் சாதி, மதம் ஆகியவற்றை பார்த்து காதலுக்கு தடைகள் கூறுவதால், பெண்கள் தாங்கள் விரும்பியவரை மணம் செய்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் ஏற்படுகிறது. இந்த மாதிரியான பிரச்சனைகள் இருப்பதால் பெண்கள் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
  • ஆண்களில் ஒருசிலர் காதலித்து, அவர்களின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்தால், பிறகு தன்னை விட்டு சென்று விட்டால் என்ன செய்வது என்ற பயத்தினாலும் பெண்கள், அதிகமாக ஆண்கள் கூறும் காதலை மறுப்பதுடன் அதிகமாக யோசிக்கிறார்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments