குழந்தை இறந்தபோது சவப்பெட்டி வாங்க பணமில்லை: போராட்டத்திலும் மங்காத காதல்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

போராட்டத்திற்கு மத்தியிலும் காதலோடு வாழ்ந்த காரல் மார்க்- ஜென்னி தம்பதியினரின் காதல் கதை இதோ,

ஜென்னி ஒரு செல்வந்தர் வீட்டு குழந்தை. இரண்டு வயதில் அவளது தந்தைக்கு பணி மாறுதல் பெற்று ஸ்ட்ரீவ்ஸ் பகுதிக்கு வந்தனர். ஜென்னியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஹேய்ன்ரிச் மார்க்ஸ்.

வக்கீல் தொழில் செய்பவர். ஜென்னிக்கு நான்கு வயது இருக்கும் போது 1818ம் ஆண்டு மே 5ம் தேதி ஹேய்ன்ரிச் மார்க்ஸுக்கு ஒரு மகன் பிறந்தான். அவர் தான் உலகின் மிக முக்கிய தத்துவக் கோட்பாட்டு தந்தை கார்ல் மாக்ஸ். மார்க்சும் ஜென்னியும் சிறு வயது முதலே ஒன்றாகவே இருந்தனர்.

பதினேழு வயதில் கார்ல்லுக்கும் ஜென்னிக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆனால், இதனை அறிந்த கார்ல் மார்க்சின் தந்தை எங்கே தனக்கும் ஜென்னிக்கும் இடையிலான நட்பு பறிபோய்விடும் என்று பயந்தார்.

மார்க்ஸ் தனது மேற்படிப்புக்காக பெர்லினுக்கு சென்ற போதும் பல அறிவுரைக் கடிதங்கள் தந்தையிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தது. ஆனால், ஜென்னி – மார்க்சின் காதல் யாரும் எட்ட முடியாத இடத்தில் பறந்து கொண்டு இருந்தது. ஜென்னி, மார்க்சை கரம் பிடிக்க ஏழு வருடம் காத்திருக்க வேண்டி இருந்தது. வீட்டில் இருந்து திருமணம் குறித்தான எல்லா கேள்விகளையும் தட்டிக் களித்தவாறு நாட்களை நகர்த்தினார் ஜென்னி. வேலை தேடினார் மார்க்ஸ்.

ஆனால், அவர் கையில் இருந்த உலக தத்துவங்களுக்கு இடையே அவருக்கு வேலை கிடைப்பது அவ்வளவு எளிதா? 1843ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு பாரிஸ் சென்றனர். அங்கு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரான்சில் பல்வேறு கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டார் மார்க்ஸ்.

தொழிலாளர்களிடையே தொடர்ந்து பேசினார். அவரது கோட்பாடுகளை ஜென்னியிடம் விளக்குவார். அவ்வளவு வறுமையிலும் ஜென்னி தனது காதலனுடன் சந்தோஷமாக இருந்தாள். ஆனால், வருமானம் இல்லா காலகட்டத்தில் ஒரு குழந்தையுடன் எப்படி காலம் தள்ளினாரோ ஜென்னி. மார்க்ஸ் பிரான்சை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டார். அங்கிருந்து பெல்ஜியம் சென்றார்.

ஒரு நாள் அவர் சிலருடன் முக்கிய விவாதத்தில் இருக்கும் போது காவல்துறையால் சிறைபிடிக்கப்பட்டார். ஜென்னி பதறினாள். சிலரைச் சந்தித்து தன் காதலனை எப்படியாவது வெளியே கொண்டு வர விரும்பினாள்.

உண்மையில் அவளால் அவரை பிரிந்து இருக்க முடியவில்லை. கடைசியில் அவளையும் சிறைபிடித்தனர். பல்வேறு மக்களின் போராட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெளியேற்றப்பட்டனர். பாரிஸ் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஜெர்மனிக்கு சென்றனர். மீண்டும் பிரான்சுக்கு போனார்கள்.

மீண்டும் நாட்டினை விட்டு வெளியேற உத்தரவு. அப்போது ஜென்னி கர்ப்பமாக இருந்ததால் அவளுக்கு மட்டும் போராடி விளக்கு வாங்கினார் மார்க்ஸ். மார்க்சினை பல்வேறு இன்னல்களுக்கு இடையே லண்டன் அனுப்பினார் ஜென்னி. லண்டனுக்கு சென்ற பொது ஜென்னியை இன்னும் வறுமை வாட்டியது. குளிரும் வாட்டியது. வீட்டிற்கு அவர்களால் வாடகை கூட கொடுக்க முடியவில்லை.

பல நேரங்களில் யாராவது வீட்டு வாடகை தருவார்கள். ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு சுகாதாரமற்ற பகுதிக்கு குடியேறினர். தொடர்ந்து அவர்களது சிறிய குழந்தை இறந்து போனது.

அதனை அவள் இவ்வாறு குறிப்பிடுகிறாள், “குழந்தை பிறந்த போது தொட்டில் வாங்க பணமில்லை; அவன் இறந்த போது சவப்பெட்டி வாங்க பணமில்லை”. வேறு ஒருவர் பணம் தர அந்தக் குழந்தையை புதைத்தனர். 1881ம் ஆண்டு டிசம்பர் 2ல் ஜென்னி கார்ல் மார்க்சிடம் இருந்து பிரிந்தாள். இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் அவள் மார்க்சை நேசித்தாள். அவரும் அவளை நேசித்தார். அவர்கள் காதலர்கள்!

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments