சூப் கடையில் வைத்து நித்யாவிடம் காதலை சொன்ன பாலாஜி

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் இடையே நடந்துள்ள குடும்ப கருத்து வேறுபாடுகள் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி குறைகூறிக்கொண்டு ஊடங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடிகர் தாடி பாலாஜியை திருமணம் செய்துகொண்டவர் நித்யா.

இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், பாலாஜியின் கொடுமைகளை இனியும் பொறுத்துகொள்ள முடியாது, அவருடன் சேர்ந்து வாழ்வது கனவிலும் நினைத்துகூட பார்க்க முடியாத ஒன்று என நித்யா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஆனால், பாலாஜியோ தனக்கு தனது மனைவியும், குழந்தையும் மிக முக்கியம், அவளை நான் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டேன், தற்போதும் அவருடன் இணைந்து வாழ விரும்புகிறேன் என கூறுகிறார்.

ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி வந்த இவர்கள் நாட்கள் செல்ல காதலர்களாக மாறியுள்ளனர். ஒரு சூப் கடையில் வைத்து நித்யாவிடம் காதலை தெரியப்படுத்தியுள்ளார் பாலாஜி.

தனது பதிலை கூறுவதற்கு நித்யா 6 மாதங்கள் எடுத்துக்கொண்டாராம்,

நித்யாவுக்கும், பாலாஜியை பிடித்துப்போய்விட்டதால் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே 15 வயது வித்தியாசம்.

திருமணத்தின்போது நித்யாவின் வயது 21, பாலாஜியின் வயது 36. எனது பெற்றோர் பார்த்து வைத்திருந்தால் கூட இப்படி ஒரு மாப்பிள்ளை எனக்கு கிடைத்திருக்கமாட்டார் என தொலைக்காட்சியின் அளித்த பேட்டி ஒன்றில் காதல் ததும்ப பாலாஜியிடம் நித்யா கூறியிருப்பார்.

மேலும், அந்த பேட்டியின்போது தனது கணவர் குடித்துவிட்டு வந்தால் மிக மோசமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார், அதனை காது கொடுத்தும் கேட்க முடியாது எனவும் கூறியிருந்தார்.

தற்போது அது விஸ்வரூபம் எடுத்துள்ளது, மேலும் தனது கணவர் ஒரு பெரும் குடிகாரர் என்றும் குடித்துவிட்டால் பிற ஆண்களோடு சேர்த்து வைத்து என்னை பேசி வருகிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments