13 ஆண்டுகள்... சாதி மீறி காதல் திருமணம் செய்த நடிகை ரோஜா

Report Print Fathima Fathima in உறவுமுறை

திரைத்துறையில் இயக்குனர் செல்வமணி- நடிகை ரோஜா நட்சத்திர தம்பதிகளாக இன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.

புகழின் உச்சியில் இருந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தாலும், 13 ஆண்டுகள் கழித்தே திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு அஞ்சு மாலிகா என்ற பெண்ணும், கிருஷ்ண கௌசிக் என்ற பையனும் உள்ளனர்.

காதல் அனுபவங்களை பற்றி பேசும் ரோஜா, செல்வாவுடன் பணியாற்றுவதற்கும், மற்றவர்களுடன் பணியாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

நடிகைகள் நடிக்கும் போது கமெரா முன் வரமாட்டார், கூச்ச சுபாவம்.

அந்த குணமே எனக்கு பிடித்துப் போனது, என்னை பற்றி என் அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையாக பேசினார்.

அம்மாவுக்கு செல்வா என்றாலே உயிர், அந்த அளவுக்கு செல்வாவை பிடிக்கும்.

எங்கள் ரெட்டி வம்சததில் வேறு சாதி பெண்ணோ, மாப்பிள்ளையோ பெரும்பாலும் ஏற்கமாட்டார்கள், செல்வா முதலியார் வகுப்பு, ஆனால் அவரது குணநலன்கள் பிடித்துப்போகவே சாதி மீறி திருமணத்திற்கு எனது குடும்பத்தினர் ஓகே சொல்லிவிட்டனர்.

அம்மா, அண்ணனிடம் சம்மதம் வாங்கிய பின்னர், எனது பிறந்தநாளில் காதலை சொன்னார்.

ஆர்கேஎஸ்னு பெயர் போட்ட நெக்லஸ் ஒன்று இருந்தது,

"உன்னை நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இதில் உனக்கும் சம்மதமானால் நான் காத்திருக்கிறேன்.

நம் திருமணம் உடனடியாக நடந்துவிடவேண்டும் என்பதில்லை. நீ இப்போது பிசியான ஆர்ட்டிஸ்ட். உன் ஆசை தீர நடி, எப்போது போதும்' என்று தோன்றுகிறதோ, அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம் என்றார்.

நானும் ஓகே சொல்லிவிட்டேன், எனக்காக 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார்.

இவரை போன்ற கணவர் கிடைக்க நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என நெகிழ்கிறார் ரோஜா.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments