ஆண்களை தொட்டு பேசலாமா?

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

பணிபுரியும் இடங்களில் ஆண் பெண் பேதமன்றி பழகுவது தேவையான ஒன்று என்றபோதிலும், அதிலும் பெண்கள் சில கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டால் பிரச்சனைகள் தங்களை சூழ்ந்துகொள்ளாதவாறு பாதுகாத்துக்கொள்ளலாம்.

ஆண் ஊழியர்களிடம் பணி சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கும்போது பேச்சு வேறு எதிலும் திசை திரும்பாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தேவையில்லாத பேச்சுக்களின் தொடக்கமே பிரச்சனைகள் உருவாக அடித்தளமாக அமையும்.

அலுவலகம் என்பது பணிபுரிவதற்கான இடம் மட்டுமே, உங்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையோ, குடும்ப விஷயங்களையோ அசைபோட ஏற்ற இடம் அல்ல என்பதை உணர்ந்தாலே பிரச்சினைகள் எழ இடமில்லாமல் போய்விடும்.

சக ஆண் ஊழியர்களுடன் கை குலுக்குதல், வெளி இடங்களில் சகஜமாக பழகுதல், வாகனத்தில் ஒன்றாக செல்லுதல் போன்ற விஷயங்கள் மற்றவர் களால் கண்காணிக்கப்படுபவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஆண் ஊழியர்களுடன் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எதற்கெடுத்தாலும் கைகொடுப்பது, தொட்டுப்பேசுவது கூடாது.

வெளி இடங்களில் எதேச்சையாக சந்திக்க நேரும்போது புன்னகைப்பது, நலம் விசாரிப்பது தவறல்ல. தேவையில்லாத விஷயங்களை பற்றி பேசி அரட்டை அடிப்பது, மற்றவர்கள் கவனத்தில்படும் அளவிற்கு உங்கள் பேச்சு, செயல், நடவடிக்கை அமைவது கூடாது.

உங்களின் திறமைகள் குறித்தோ, உடுத்தும் ஆடை பற்றியோ பாராட்டும்போது நன்றி தெரிவியுங்கள். தேவையில்லாமல் முக பாவனைகளை வெளிப்படுத்தாதீர்கள். வெட்கப்படுவதையோ, பெருமிதம் கொள்வதையோ, தொடர்ந்து அவர்களிடம் பாராட்டுகளை எதிர்பார்ப்பதையோ தவிருங்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments