உங்களை நேசிக்கும் பெண் விலகினால் இதை பின்பற்றுங்கள்

Report Print Printha in உறவுமுறை
247Shares
247Shares
lankasrimarket.com

உங்களை நேசிக்கும் ஒரு பெண் திடீரென உங்களை நிராகரிப்பது, தவிர்ப்பது போன்றவாறு இருந்தால் நீங்கள் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நேசிக்கும் பெண் தவிர்த்தால் என்ன செய்ய வேண்டும்?
  • நீங்கள் உண்மையாக நேசிக்கும் ஒரு பெண் உங்களை தவிர்த்தால், அது உங்கள் மீதுள்ள சந்தேகமாக கூட இருக்கலாம். அதனால் எந்த அளவுக்கு நீங்கள் அந்தப் பெண்ணை நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
  • நீங்கள் ஒரு பெண்ணை விரும்புவதை அவர்களிடம் தெரிவித்த உடனே அவர்களின் பதிலை கூற வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவர்களுக்காக சிறிது கால இடைவெளி விட வேண்டும்.
  • உங்களை நேசிக்கும் பெண் உங்களை தவிர்ப்பதற்கான காரணத்தை நீங்களாகவே முடிவு செய்து கொள்ளக் கூடாது. அவர்களிடம் சென்று அதற்கான காரணத்தை கேட்க வேண்டும்.
  • உங்களை காதலிக்கும் பெண் உங்களை அதிகமாக தவிர்த்தால், உடனே அவர்களை சந்தேகப்படாமல், அவர்களின் சூழ்நிலையை பற்றி நன்கு புரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
  • உங்களை நேசிக்கும் பெண்களுக்கு பிடிக்காத முகம் சுழிக்க வைக்கக்கூடிய செயல்களை தொடர்ந்து செய்யாதீர்கள். மேலும் தொடர்ந்து உங்கள் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் காரணத்தை மட்டுமே அவர்களிடம் கேட்டுக் கொண்டே இருக்காதீர்கள்.
  • நீங்கள் செய்யும் எந்த முயற்சிக்கும் அவர்கள் கவனிக்கவில்லை எனில், விலகி வந்து விடுங்கள். வற்புறுத்தலின் பேரில் அவர்களிடம் விவாதம் செய்து துன்புறுத்தாதீர்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்