அழகை பார்த்து காதலித்த ஆண்: முடிவில் அவனுக்கு நடந்தது? கண்ணீர் வரும் காதல் கதை

Report Print Printha in உறவுமுறை
284Shares
284Shares
Promotion

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காதல் இருப்பதை விட அந்த காதல் மூலம் ஏற்பட்ட பிரிவின் வலி வித்தியாசமானதாக இருக்கும்.

காதல் ஒன்று சேர்ந்த கதையை கேட்கும் போது நம் மனதில் மகிழ்ச்சியை தரும்.

ஆனால், அதுவே பிரிந்த காதல் கதையை கேட்கும் போது நமக்கே தெரியாமல் நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அத்தகைய காதலில் ஒருவகை கதை இதோ,

எனது தோழி ஒருத்திக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தார்கள், ஆனால் நான் எந்த ஒரு ஆணுடனும் பேச மாட்டேன்.

எனது தோழி ஒருநாள், அவளது நண்பன் ஒருவனுக்கு என் போனில் இருந்து அவன் எண்ணிற்கு அழைத்து, எனக்கு உடனடியாக கால் செய்ய சொல்லும் படி கூறினாள்.

அவளுக்கு ஏதோ அவரசம் போல என்று, நானும் அவனுக்கு கால் செய்தேன். அன்று முதல் எனது எண்ணுக்கு அவன் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்து விட்டான்.

அவன் என்னிடம் நல்ல முறையில் பேசியதால் நானும் அவனுடன் பேசினேன். சில நாட்கள் சென்றது...

எனது பிறந்த நாளன்று அவனை நேரில் பார்த்தேன்.. நண்பன் என்ற முறையில் தான் நான் அவனுக்கு இனிப்பு கொடுத்தேன்.

பின்னர் அவன் தனது நட்பு வட்டாரத்தில் என்னை காதலிப்பதாக கூறியிருந்தான். எனது தோழியிடமும் கூட கூறியிருந்தான். இவ்வாறு எனக்கு அவனது காதல் பற்றி தெரியவந்தது.

அவனது பேச்சு, நடை, உடை, பாவணை, பெண்களுடனான நட்பு அனைத்தும் எனக்கு அவனை நண்பனாக பார்த்த பொழுது பெரியதாக தெரியவில்லை.

ஆனால் காதல் என்று வரும் போது அவனை சற்றும் எனக்கு பிடிக்கவில்லை. இருப்பினும், அவனுடன் பேசினேன்..

பேசும் போது எல்லாம், எனக்கு ஒருவித மனக்கசப்பு தான் ஏற்பட்டது. அவன் தன்னை காதலிக்கும் படி என்னிடம் கெஞ்சினான்... குடித்து விட்டு கூட பல பிரச்சனை செய்தான்.

அதை பார்த்த என நட்பு வட்டாரங்களும் அவனை காதலிக்கும் படி என்னிடம் கேட்டுக் கொண்டது.

பல நாட்களுக்கு பிறகு அவனை வேண்டா வெறுப்பாக.. பாவம் பார்த்து காதலிக்க தொடங்கினேன்...! ஆனால் அவனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

அதன் பின் எனது தோழியும் அவனை பற்றிய நல்ல விடயங்களை கூறி என்னை தேற்றினாள். நாட்கள் சென்றது... என் மனதிலும் காதல் மலர்ந்தது...!

நான் அவனை எனது பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்..! அவன் எனது பெற்றோர்களுக்கு மிகவும் நெருக்கமானவன் ஆனான்.

பின் அவனை எனக்கு பிடித்தது. அவனுக்கும் என்னை பிடித்தது. கல்லூரி நாட்களில் அவன் படிப்பதற்கு நான் என்னால் ஆன உதவிகளை செய்தேன்.

அவனும் முன்பை விட நல்ல மதிப்பெண்களை எடுத்தான். ஒரே கல்லூரி என்பதால் தினமும் சந்திப்பது, மொபைல் மூலம் அரட்டை அடிப்பது என்று தொடர்ந்து நடக்கும்.

ஆனால் அவன் என்னுடன் ஏதாவது சண்டை போட்டால், எனது தோழிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

அவள் எங்களை சேர்த்து வைப்பது போல நடித்து அவளால் முடிந்த பிரிவை ஏற்படுத்தி வைப்பாள். இவன் அவளுக்கும் தோழி என்பதால், அவள் என்ன சொன்னாலும் நம்பி விடுவான்.

ஆனால் அவள் என்ன கூறினாள் என்பது பற்றி என்னிடம் எதையும் கூற மாட்டான். இது பல மாதங்களாக எனக்கு புரியாமலே இருந்தது.

ஒருநாள் என்னை பற்றி தவறாக, வேறு ஒரு ஆணுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக, எனது தோழி அவனிடம் கூறி விட்டாள்.

இதனை வேறு ஒருவர் கூறியதாக அவன் வந்து என்னிடம் கேட்டான். இவ்வளவு சந்தேகமா என் மீது என்று நான் கேட்டேன்.

இல்லை உறுதி செய்து கொள்ள தான் கேட்கிறேன் என்றான்... நான் அப்படி எல்லாம் செய்யவில்லை என்று அழுதேன்..

இந்த அழுகை, எங்கே அவன் என்மீது சந்தேகப்பட்டு, என்னை விட்டு போய்விடுவானோ என்ற பயத்தில் வந்த அழுகை தான்..!

அவன் அப்போதைக்கு சமாதானம் ஆனான். ஆனாலும் அவன் அதை மறக்காமல் நான் செய்யாத ஒரு தவறை அடிக்கடி சொல்லி காட்டினான்.

நான் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறேன், அதோடு அறிவிலும் சிறந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக தான் அவன் என்னை காதலித்தான்.

என்னை விட சிறந்த பெண் கிடைத்தாள் என்னை கழற்றி எறிந்து விடுவான், இது தான் அவன் திட்டம் என்று பலரும் அவனை பற்றி என்னிடம் கூறினார்கள்.

அதன் பின் பலரும் அவனை பற்றி என்னிடம் தவறாக கூறினார்கள். இவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர்.

ஆனால் அதை எல்லாம் நான் நம்பவில்லை. அவனிடம் அப்படியே கூறினேன். அவன் நான் அவ்வாறு இல்லை என்று கூறினான்...!

சரி, நான் உன்னை நம்புகிறேன் என்று நம்பினேன்..! அது தான் நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்பது நாட்கள் செல்ல செல்ல எனக்கு புரிய வந்தது.

எங்களது கல்லூரி காலம் முடிந்தது...! அவன் மேற்ப்படிப்பிற்காக வேறு ஒரு கல்லூரியில் படித்தான். நானும் வேறு ஒரு கல்லூரியில் படித்தேன். ஆனால் அப்போதும் அவன் என்னை காதலித்து கொண்டு தான் இருந்தான்.

ஒருநாள் நான் அவனை காண்பதற்காக, பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது அவனது கல்லூரியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் சாதாரணமாக பேசினேன்.

அப்போது அந்த பெண்ணும் இவனும் ஒரே ஊர் என்று.. அவனை தெரியும் என்றும் கூறினாள். நான் என்ன அவனை இன்னும் காணவில்லை என்று கேட்டேன், அதற்கு அவள் அவர், அவரது காதலியுடன் தான் வருவார் என்று கூறினாள். நான் அதிர்ந்து விட்டேன்.

ஒருநாள் நான் அவனது முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று, அவனிடம் கூறாமல் அவனது கல்லூரிக்கு சென்றேன்.

அவன் அந்த பெண் கூறியபடியே அவனது புதிய காதலியுடன் கைகோர்த்து வந்தான். எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

உடனே, நான் சென்று அவனது கையை பிடித்து இழுத்து, அவனை கன்னத்தில் அறைந்தேன்.

அவனது புதிய காதலியோ, எனது காதலனை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டாள். அவளுக்கு உண்மை தெரியாது என்று நான் அவளிடம் எங்களது காதல் கதையை கூறினேன்.

அவன் அவளிடம் என்னை பற்றி மிகவும் அவதூறாக கூறியது தெரியவந்தது. எனக்கு நடந்த துரோகத்தை உணர்ந்து வந்து விட்டேன்.

சில மாதங்களிலேயே அவனது புதிய காதல் முடிந்து விட்டது. அவன் என்னை பற்றி புகழ ஆரம்பித்து மீண்டும் அவன் என்னை காதலிக்க ஆசைப்படுகிறான் என்று எனக்கு புரிந்தது.

ஆனால் நான் அவனை கண்டு கொள்ளவே இல்லை. நான் அவனை வெறுத்தேன். இப்போது எனது படிப்பு நல்லபடியாக முடிந்து, நான் நல்ல நிலையில் இருக்கிறேன்.

என்னை ஏமாற்றி வேறொரு பெண்ணை காதலித்த அவன், என்னை மிஸ் பண்ணி விட்டோம் என்று நினைத்து அவன் வாழ்க்கை முழுவதும் வருந்தும் அளவிற்கு அவன் முன் வாழ்ந்து காட்டுவேன் இதுவே எனது லட்சியமாக நான் நினைக்கிறேன்....!

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்