முதல் திருமண நாள் முடிந்துவிட்டதா? இதோ இந்த டிப்ஸை படியுங்கள்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
383Shares
383Shares
ibctamil.com

ஒரு வருடம் திருமண வாழ்க்கை முடிந்துவிட்டாலே உறவுகளுக்குள் சலிப்பு ஏற்பட்டுவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், தம்பதியர் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள மனம் விட்டு பேசி, வெளிப்படைத்தன்மையாக இருந்தால் வாழ்க்கையில் சலிப்பு என்பது வராது.

கணவன் மனைவிக்கு இடையேயான நட்பை வலிமைப்படுத்தும் வழிகள் இதோ,

இருவரும் வெளிப்படையாக இருங்கள். நூறு சதவிகிதம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், 'இன்று நண்பனுடன் லன்ச் சாப்பிட போனேன்' என்பதுவரை சொல்லலாம். அங்கே நண்பருடன் பேசியதெல்லாம் ஒப்புவிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த வெளிப்படைத்தன்மை, 'என் துணை எனக்குத் தெரியாமல் எதுவும் செய்யமாட்டார்' என்ற கர்வத்தை ஏற்படுத்தும். இந்த கர்வ உணர்வு, தாம்பத்தியத்தில் சலிப்பு தட்டாமல் பார்த்துக்கொள்ளும்.

உங்களுடைய சின்னச் சின்ன தவறுகளை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் மறைக்க வேண்டாம். நீங்கள் மறந்துவிட்டதைக் கணவன்/ மனைவி சுட்டிக்காட்டினால், ஒப்புக்கொள்ளுங்கள்.

பரஸ்பரம் ஒரு மரியாதை உருவாகும். தன் துணை மீது இந்த மரியாதை உணர்வு வரும்போது, உடம்பில் சிலிர்ப்பு ஒன்று வரும். இதுபோதும் சலிப்பை தூக்கித் தூர எறிய.

பெண்கள் தங்களின் தனித்துவத்தை நிரூபிக்க களமிறங்கியிருக்கும் காலம் இது. அதன் விளைவாகப் பேச்சில், செயலில் வேகம் அதிகமாக இருக்கும்தான். இதன் பெயர் தன்னம்பிக்கை. இது, உங்கள் மனைவியிடம் இருந்தால் பாராட்டுங்கள்.

ஆண்களே, காலங்காலமாக நீங்கள் பெண்களை அடக்கி ஆண்ட குணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். நல்ல தாம்பத்தியத்துக்கு இது எப்போதும் எதிரிதான்.

ஒருவரையொருவர் சார்ந்து இருங்கள். 'நீயில்லாமல் நான் இல்லை' என்ற உணர்வில் மிகப்பெரிய காதல் இருக்கிறது.

ஆங்கிலத்தில் 'ஸ்வீட் நத்திங்' என்பார்கள். அதாவது, உங்கள் இருவருடைய சின்னச் சின்ன ரசனைகளையும் பரிமாறிக்கொள்ளுங்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்