அப்பாவை எதிர்த்து திருமணம்: காதல் வாழ்க்கை பற்றி மனம் திறக்கிறார் மணிமேகலை

Report Print Printha in உறவுமுறை

பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலைக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் மணிமேகலையும் அவரது நெருங்கிய நண்பரான ஹுசைன் என்பவருக்கும் நேற்று பதிவு திருமணம் நடந்து முடிந்தது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட மணிமேகலை, தன் காதல் திருமணம் குறித்த அனுபவத்தை அனைவரிடமும் பகிர்ந்துள்ளார்.

ஒரு நாள் சன் மியூசிக்கில், லாரன்ஸ் மாஸ்டர் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா எனும் படத்தின் ஆடலுடன் பாடலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் பாட்டில் ஒரு பையன், லாரன்ஸ் மாஸ்டரோடு ஆடினான். அவனுடைய டான்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

உடனே யாரு இவன்? மிகவும் அருமையாக ஆடுகிறான். இவனைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று நினைத்தேன்.

நான் ஒரு முயற்சியில் இறங்கி விட்டால் அதை முடிக்காமல் விட மாட்டேன். அதனால் எப்படியோ அங்கே இங்கே கேட்டு, அவனுடைய போன் நம்பரை கண்டுபிடித்து விட்டேன்.

அப்போது தான் அவர், சினிமாவில் உதவி நடன இயக்குநராக உள்ளார் என்பது தெரியவந்தது. நான் அவருக்கு போன் பண்ணி நீங்கள் அருமையாக ஆடுனீங்க என்று பாராட்டினேன்.

அவர் சற்று நேரமாவது என்னுடன் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவரோ நன்றிங்க என்று ஒற்றை வார்த்தையை கூறிவிட்டு போனை கட் பண்ணிவிட்டார்.

எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் குணம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தொடர்ந்து நாங்கள் நட்பாக பேசிக் கொண்டிருந்தோம்.

அவருடைய பிறந்தநாள் நேரத்தில், ஒரு தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் அவர் இருந்தார். அவரைப் பார்க்க நான் மட்டும் தனியாக காரில் ஹைதராபாத் சென்று என் காதலை சொன்னேன்.

அப்போது தான் அவருக்கு என் மீது இரக்கமே வந்தது. அவரும் ஓகே சொல்லி விட்டார்.

அதன் பின் என் வீட்டில் நான் காதலிப்பதை கூறினேன். ஆனால் எது கேட்டாலும் வாங்கி கொடுக்கும் என் அப்பா, நானும் ஹூசைனும் வேறு மதம் என்பதால் எங்களின் திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

அதனால் ஒரு கட்டத்தில் எனக்கு வேற ஒரு திருமண ஏற்பாடுகள் செய்ய தொடங்கியதால் நான் வீட்டை விட்டு வந்து பதிவு திருமணம் செய்து கொண்டேன்.

இப்போது நான் ஹூசைன் வீட்டில் தான் இருக்கேன். அங்கு உள்ளவர்கள் என்னை அவங்க வீட்டு பெண் போல நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள்.

அதேபோல் என் அப்பா எங்களை புரிந்துக் கொண்டு எங்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இதன் காரணமாக என் அப்பா மீது நான் வழக்குத் தொடுத்ததாக சில வதந்திகள் பரவுகிறது. ஆனால் அது எதுவுமே உண்மை இல்லை. ஐ லவ் மை டாடி.

ஹூசைனும் நானும் ஒருத்தருக்கொருத்தர் புரிதலோடு வாழ்க்கையைத் தொடங்கி இருக்கோம். எங்களின் இந்த புரிதல் வாழ்நாள் முழுவதும் நிச்சயம் நிலைத்திருக்கும்.

எங்களின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அதேநேரம் எங்களை சமூக ஊடகத்தில் திட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றி என்று மணிமேகலை தெரிவித்துள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...