இதனால் தான் அனுஷ்காவை விரும்பினேன்: கோஹ்லியின் சுவாரஸ்ய காதல் கதை

Report Print Printha in உறவுமுறை
705Shares
705Shares
ibctamil.com

கிரிக்கெட்டில் நம்பர் 1 ஆக இருக்கும் விராட் கோஹ்லிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர், அதே போல பாலிவுட் சினிமாவில் நம்பர் 1 ஆக இருக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்த இரண்டு பிரபலங்களும் சில ஆண்டுகளாக காதலித்து வருவது உலகறிந்த செய்தி..

ஆனால் இவர்களின் ஐந்து வருட காதலில் உணர்ந்த தருணங்கள், காதலை வெளிப்படுத்திய நிமிடங்கள் பற்றி நமக்கு எதுவும் தெரியாது அல்லவா?

அனுஷ்கா, கோஹ்லியின் இடையே காதல் மலர்ந்தது எப்படி?

2013-ம் ஆண்டு ஒரு விளம்பரத்தில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள். அதன் பிறகு பல இடங்களில் ஒன்றாக சேர்ந்து சென்றதால் அவர்களை பற்றிய வதந்திகளும் பரவியது.

2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் டூரின் போது மும்பை வந்தனர்.

அந்நேரத்தில் அனுஷ்கா இலங்கையில் நடைப்பெற்ற பாம்பே வெல்வெட் என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது, திடீரென இலங்கையில் அனுஷ்கா தங்கியிருக்கும் இடத்திற்கே கோஹ்லி சென்று அனுஷ்கா ஷர்மாவிற்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

அதேபோல விராத் உதய்பூரில் அமிர்கானின் பி.கே திரைப்பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, அவரின் 26-வது பிறந்தநாளாம், அன்றும் சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்திருக்கிறார்.

அதன் பின் அக்டோபர் 2014-ம் ஆண்டு சேர்ந்து காட்சியளிக்க ஆரம்பித்து விட்டனர். அப்போது நடைப்பெற்ற இந்தியன் சூப்பர் லீக் தொடரைப் பார்க்க இருவரும் சேர்ந்தே வருவது, விமானத்தில் ஒன்றாக பயணிப்பது என்று தொடர்ந்தது.

இதை தொடர்ந்து நவம்பர் 2014-ல், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராத் மைதானத்தில் இருந்த படியே அனுஷ்கா உட்கார்ந்திருந்த திசையை நோக்கி ஒரு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தாராம்.

இவ்வாரு பல வதந்திகள் வெளிவர, இது குறித்து இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அனைவரும் கேட்டார்களாம்.

அதற்கு அவர்கள் எங்கள் இருவருக்கும் இடையில் ஒன்றுமில்லை, நாங்கள் எதையும் மறைக்கவும் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

அதன் பின் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மெல்பர்னில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக்கேல் ஸ்லேட்டர், தவறுதலாக விராத்தின் மனைவியான அனுஷ்கா சர்மா என்று உச்சரிக்க, அந்த விடயம் பயங்கரமாக வைரலானது.

அதனை தொடர்ந்து ஆண்களுக்கான மேகசின் ஒன்றின் அட்டைப் படத்திற்கு அனுஷ்கா கவர்ச்சியான போஸ் கொடுத்திருந்தார்.

அது விராத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அதனால் இருவருக்குமே சண்டை ஏற்பட்டது.

இச்சண்டை பெரிதாக இருவரும் பிரிந்து விட்டார்கள். இதனால் இவர்களின் காதல் ப்ரேக் அப் ஆகிவிட்டது என்று இவர்களின் உறவில் மற்றொரு வதந்தியை பரப்பினர்.

இந்தப் பிரச்சனைக்குப் பிறகு விராத் மைதானத்தில் லேசாக சொதப்ப ஆரம்பித்தார், அதனால் அனுஷ்காவிற்கு எதிராக கோஷங்களையும், மீம்ஸ்களையும் தெரிக்கவிட்டனர்.

இதனால் மன வருத்தம் அடைந்த விராத், அனுஷ்காவை கிண்டல் செய்தவர்களுக்கு ஷேம் என்று சுவற்றில் எழுதியது போன்ற ஒரு படத்தைப் போட்டு அதன் கீழே, அனுஷ்காவை தவறாக விமர்சிப்பவர்களே, இது ஒரு விளையாட்டு நான் மைதானத்தில் விளையாடுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று சரியான பதிலடி கொடுத்தார்.

இதன் காரணமாக மனமுடைந்த அனுஷ்கா விராத்தின் பதிலை பார்த்து ஆசுவாசமடைந்தார். மீண்டும் பல இடங்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து செல்ல ஆரம்பித்தனர்.

இவ்வளவு வதந்திகளுக்கு பின் இந்த வருடம் காதலர் தினத்தன்று அனுஷ்காவுடனான தன்னுடைய காதலை விராத் உறுதிப்படுத்தினார்.

நீ விரும்பினால் எல்லா நாளுமே காதலர் தினம் தான். உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நாளுமே எனக்கு அப்படித்தான் என்று அனுஷ்காவுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் சேர்த்திருந்தார்.

அதற்கு பின்பு தீபாவளி சிறப்பு நிகழ்சியாக அமிர் கான் நடத்திய ஒர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விராத் பங்கேற்றார்.

அப்போது அனுஷ்காவுடனான காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதுவும் அனுஷ்காவை ஏன் காதலித்தீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவர், மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்.

அவள் மிகவும் நேர்மையானவள், எப்போதும் அவள் மனதிலிருந்தே தான் பேசுவாள். அதில் தான் நான் விழுந்தேன் என்றும், நான் அவளை நுஷ்கீ என்று செல்ல பெயரால் அழைப்பேன் என்றும் விராத் கூறியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்