ரத்தக்கறை இருக்கிறதா? கன்னித்தன்மைக்கு எதிராக போராடும் தம்பதி

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது வரை காலகட்டத்தில் இருக்கும் கன்னித்தன்மை சோதனைக்கு எதிராக தம்பதியினர் வாட்ஸ் அப் மூலம் போராடி வருகின்றனர்.

கஞ்சர்பட் சமூகத்தினர் மத்தியிலேயே இந்த பழக்கம் மேலோங்கி உள்ளது. பஞ்சாயத்தின் கட்டளைப்படி, திருமணமானதும், முதலிரவு வெண்ணிற படுக்கையில்தான் நடத்தப்பட வேண்டும்.

அதில் ஏதேனும் ஏமாற்று வேலை செய்யக்கூடாதென்பதற்காக அன்றிரவு முழுக்க பஞ்சாயத்துப் பெருசுகள் அந்த வீட்டைச் சுற்றி அமர்ந்து கண்காணிப்பர்.

மறுநாள் அந்தப் படுக்கையில் ரத்தக்கறை இருக்கிறதா என அவர்களே பரிசோதிப்பார்கள். கறை இருந்தால், அப்பெண் கன்னித்தன்மையோடுதான் இருந்திருக்கிறாள் என்றும், இல்லையென்றால் அவள் கன்னித்தன்மையை ஏற்கெனவே இழந்துவிட்டாள் என்றும், தவறான நடத்தை கொண்டவள் என்றும் முடிவுக்கு வந்து அவளைக் கணவரிடமிருந்து பிரித்து வைப்பதோடு, அவளது எதிர்காலத்தையே ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்.

இந்த கன்னித்தன்மை சோதனை கடுமையாக உழைக்கும் பெண்களுக்கும், விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பெண்களுக்கும் இந்த லாஜிக்கெல்லாம் பொருந்தாது என்றும், இப்படிச் சோதிப்பது, அப்பெண்ணின் தனிமனித உரிமையைப் பறிப்பதோடு, சட்டத்திற்கும் புறம்பானது என்றும் அச்சமூகத்தினர் உணராதிருக்கிறார்கள்.

எனவே, இச்சோதனைக்கு உட்படாமல், கிருஷ்ணா - அருணா தம்பதியினர் இந்தக் கொடுமையான மூடப்பழக்கத்தை எதிர்த்து நின்றனர். சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டாலும் மனந்தளராமல் அச்சமூக இளைஞர்களிடையே விழிப்புஉணர்வு செய்துவருகின்றனர்.

இதனால், இவர்கள் அந்த சமூகத்தை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளனர், இத்தம்பதியினர், தற்காலத் தொழில்நுட்ப வசதியைக் கையிலெடுத்தனர். ஒரு வாட்ஸ்அப் குழுமத்தை "கன்னித்தன்மை சோதனையை நிறுத்து (Stop the 'V'Ritual)" என்ற பெயரில் தொடங்கினார்கள்.

அதில், அவர்களது சமூகத்தைச் சேர்ந்த முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்தனர். விழிப்புஉணர்வுள்ள நாற்பது பேர் வரை அக்குழுமத்தில் இணைந்துள்ளனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்