2017ல் காதல் டூ திருமண பந்தம்: பிரபல ஜோடிகள் யாரெல்லாம் தெரியுமா?

Report Print Printha in உறவுமுறை
254Shares
254Shares
ibctamil.com

2017-ம் ஆண்டு பலருக்கும் பல வகையிலும் சிறப்பாக அமைந்திட்ட நேரத்தில், இந்த ஆண்டில் காதலில் தொடங்கி திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழைந்த பிரபல ஜோடிகள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.

விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் திரைப்பட நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோரின் ஜோடி பல ஆண்டுகளாக நிகழ்த்தி வந்த காதல் இந்த ஆண்டு திருமணத்தில் முடிந்துள்ளது.

ஜாஹிர் கான் - சகாரிகா காட்கே

இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளர் ஜாஹிர் கான், திரைப்பட நடிகை சகாரிகா காட்கே ஆகிய இருவருமே பல ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள். இவர்கள் வீட்டின் எதிர்ப்பு காரணமாக கடந்த நவம்பர் 23-ல் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள்.

ரூனிட் பிஸ்வாஸ் - கவிதா கவுசிக்

சந்திரமுகி சவுதாலா என்கிற சீரியல் கதாப்பாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமான கவிதா கவுசிக் தனது காதலர் ரூனிட் பிஸ்வாஸை இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணம் செய்துக் கொண்டார்.

நாக சைதன்யா - சமந்தா

தெலுங்கு திரைப்பட நடிகர் நாக சைதன்யா மற்றும் திரைப்பட நடிகை சமந்தா ஆகியோரின் திருமணம் இந்த ஆண்டு நடைபெற்றது. இவர்களின் திருமணம் அறிவிக்கப்பட்டதில் இருந்து திருமண சடங்குகள் முடிவுற்றது வரை அனைத்து புகைப்படங்களுமே சமூகவளைதளத்தில் ட்ரெண்டாகி வந்தது.

நீல் நிதின் முகேஷ் - ருக்மிணி சாஹே

நடிகர் நீல் நிதின் முகேஷ், ருக்மிணி சாஹே ஆகிய இருவரும் இந்த ஆண்டு உதய்பூரில் பிப்ரவரி 9-ம் திகதி திருமணம் செய்துக் கொண்டனர். இந்த பட்டியலிலே இவர்கள் மட்டும் தான் முதல் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

ஹர்ஷ் லிம்பாச்யா - பார்தி சிங்

காமெடி நடிகை பார்தி சிங் தனது நீண்ட நாள் காதலரான எழுத்தாளர் ஹர்ஷ் லிம்பாச்யாவை இந்த ஆண்டு டிசம்பர் 3-ம் திகதி கோவா கடற்கரையில் வில் திருமணம் செய்துக் கொண்டார்.

ப்ரெண்ட் கோபல் - ஆஷ்கா கோராடியா

ஹிந்தி நடிகை ஆஷ்கா கோராடியா தனது அமெரிக்க காதலர் ப்ரெண்ட் கோபலை டிசம்பர் 2-ம் திகதி கிறிஸ்துவ முறைப்படியும், 3-ம் திகதி இந்து முறைப்படி என்று இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார்.

வட்சால் சேத் - இஷிதா தத்தா

இந்த ஜோடிகள் தங்களது பெற்றோர், நண்பர்கள் என அனைவருக்குமே தாங்கள் திருமணம் செய்து கொள்ள போகும் விடயத்தை ரகசியமாக வைத்திருந்து திருமண நாள் அன்று காலையில் அறிவித்தார்கள். இவர்களின் திருமணம் கடந்த 29-ம் திகதி மும்பையில் நடைபெற்றது.

அஃப்தாப் சிவ்தாசானி - நின் டூசன்ஜ்

பாலிவுட் நடிகர் அஃதாப் சிவ்தாசானி தனது இலங்கை மனைவியான நின் டூசன்ஜை செப்டம்பர் 1-ம் திகதி திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி தங்களது திருமணத்தை 2014-ம் ஆண்டே பதிவு செய்து விட்டது. முறைப்படி இந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.

ஆனந்த் திவாரி - ஹர்ஷிதா பட்

பாலிவுட் நடிகை ஹர்ஷிதா பட், தனது காதலர் ஐக்கிய நாடுகளின் சபைக்கான அரசியல் ஆலோசகருமான ஆனந்த் திவாரியை மார்ச் 4-ம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களின் திருமணம் பாதுகாப்பு காரணங்களால் நடைபெற்றது. அதனால் திருமணம் முடிந்து சில நாட்களுக்கு பின் தகவலை தெரிவித்தனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்