அழிவை நோக்கி ஆண் இனம்: அதிர்ச்சி தகவல்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
810Shares
810Shares
ibctamil.com

உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்லினுள்ளும் 46 குரோமோசம்கள் உள்ளன.

மனிதர்களின் ஆண் இனத்தில் xy மற்றும் பெண் இனத்தில் xx குரோமோசோம்களும் உள்ளன.

இதில், இனப்பெருக்கத்தின் போது X குரோமோசோம்களும் X குரோமோசோம்களும் இணையும் போது பெண் பாலின உயிர்களும், X குரோமோசோம்களுடன் Y குரோமோசோம்களும் இணையும் போது ஆண் பாலின உயிர்களும் தோன்றுகின்றன.

இதில், X குரோமோசோம்கள் ஆண்கள், பெண்கள் இருவரின் உடலிலுமே இருக்கும். Y குரோமோசோம்கள் ஆண் பாலினத்தில் மட்டுமே இருக்கும். ஆனால், ஆண்களின் உடலில் இருந்து y குரோமோசோம்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்களின் ரத்த செல்களில் Y குரோமோசோமின் அளவு நாளுக்கு நாள் குறைவதனாலேயே ஆணின் ஆயுள் குறைவதாகவும், அவர்களை புற்றுநோய் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் 4.6 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம்கள் மறைந்துவிடும். பூமியில் உயிர்கள் தோன்றி 3.5 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனோடு ஒப்பிடும் போது Y குரோமோசோம்கள் மறைவதற்கான காலம் என்பது மிகக்குறைவுதான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Y குரோமோசோம்கள் மறைந்து வருவதால், எதிர்காலத்தில் ஆண்களின் இனமே அழிந்துவிடுமோ என்று அச்சம் தெரிவித்துள்ளார் அவுஸ்திரேலியாவின் முன்னணி விஞ்ஞானி கிரேவ்ஸ்.

ஆனால், உடலில் இருக்கும் மற்ற குரோமோசோம்கள் அந்த இடத்தை பூர்த்திசெய்யக்கூடும் என்றும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மேலும், செயற்கை கருத்தரிப்பு மூலம் மட்டுமே இனப்பெருக்கம் நடைபெறும் சூழல் உருவாகும் எனவும் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்