ஆச்சி மனோரமாவின் காதல் திருமணம்!

Report Print Printha in உறவுமுறை
701Shares
701Shares
ibctamil.com

ஆச்சி மனோரமா கடந்து வந்த பாதை அனைவருக்குமே தெரியும். ஆனால் அவரது திருமண வாழ்க்கை பற்றி உங்களுக்கு தெரியுமா?

மனோரமா நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது சக நடிகராக அறிமுகமான ராமநாதன் நாடகத்தில் அதிக செல்வாக்கோடு இருந்ததால், அவர் மனோரமாவுக்கு சில நாடக வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்தார்.

தாயுடன் வசித்து வந்த மனோரமா ராமநாதனின் ஆதரவிலும் அன்பிலும் மயங்கி அவர் மீது காதலில் விழுந்தார்.

இது தெரிந்த மனோரமாவின் தாய், ராமநாதன் வேறு ஜாதி என்பதால், அவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார்.

ஆனால் மனோரமா தனது தாயை மீறி ராமநாதனை திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணம் செய்து கொண்ட அவர்கள் இருவரும் 10 மாதங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள்.

ஏனெனில் ராமநாதன் தனது நண்பர்களிடம் மனோரமாவை மடக்கி காட்டுகிறேன் என்று சவால்விட்டு, அந்த சவாலை நிறைவேற்ற காதலிப்பதாக நடித்து திருமணம் செய்துக் கொண்ட ராமநாதனின் திட்டம் மனோரமாவிற்கு தெரியவந்தது.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த மனோரமா ராமநாதனின் திட்டம் தெரிந்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார்.

மனோரமாவிற்கு பிறந்த குழந்தையால் ராமநாதனின் உயிருக்கு ஆபத்து என்று ஒரு ஜோதிடன் கூறியதைக் கேட்ட ராமநாதன் அந்தக் குழந்தையை கொல்வதற்கு முயற்சி செய்தார்.

இதனால் மனோரமா தனது குழந்தையின் உயிரை காப்பாற்ற நிரந்தரமாக ராமநாதனை விட்டு பிரிந்து சென்றார்.

அதன் பிறகு நாடகம், சினிமா என்று வளர்ச்சி அடைந்த மனோரமா பல்வேறு உயரங்களை எட்டினார்.

மனோரமா சின்னத்தம்பி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவரின் கணவர் ராமநாதன் இறந்துவிட்டார்.

பின் மனோரமா தனது மகனான பூபதியை அழைத்துக் கொண்டு சென்று இறுதிச் சடங்கை முடித்து விட்டு வந்தார்கள்.

சமூக வழக்கப்படி, மனோரமாவை பூவும் பொட்டும் இல்லாமல் வாழ சமூகத்தவர்கள் வலியுறுத்திய போது அவர் மறுத்து விட்டார்.

ஏனெனில் அவர் மகனான பூபதி தன் கடமையை செய்தான், ஆனால் ராமநாதன் என்னை விட்டு எப்போது சென்றாரோ அப்பொழுதே என் கணவர் இறந்துவிட்டார் என்று கூறினாராம்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்